வவுனியாவில் உளசமூகச் செயற்றிறன் விருத்திச் செயலமர்வு
வடமாகாண சமூக சேவைகள் திணைக்கள உத்தியோகத்தர்களுக்கான உளசமூகச் செயற்றிறன் விருத்திச் செயலமர்வு வவுனியாவில் நடைபெற்றது.
வவுனியா, தவசிக்குளம் சேவாலங்கா விருந்தினர் விடுதியில் கடந்த 20ஆம் 21ஆம் 22ஆம் திகதிகளில் இந்தச் செயலமர்வு நடைபெற்றது.
யுனிசெவ் நிறுவனத்தின் அனுசரணையில் நடைபெற்ற இந்தச் செயலமர்வில் வடமாகாண சமூக சேவைகள் திணைக்களப் பணிப்பாளர் நளாயினி இன்பராஜ், யுனிசெவ் அமைப்பின் திட்ட அதிகாரி சர்மிலி சதீசன், யாழ். மாவட்ட உளசமூகப் பணியாளர் எஸ்.ரவீந்திரன், வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் உளநல மருத்துவ நிபுணர் எஸ்.சிவதாஸ், கொழும்பு போதனா வைத்தியசாலையின் உளநல மருத்துவர் மகேசன் கணேசன் மற்றும் மாவட்ட சமூக சேவைகள் அலுவலர்கள், பிரதேச செயலக சமூக சேவைகள் அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
வவுனியாவில் உளசமூகச் செயற்றிறன் விருத்திச் செயலமர்வு
Reviewed by NEWMANNAR
on
November 24, 2013
Rating:

No comments:
Post a Comment