வடமாகாண ஆளுநரின் கருத்துக்கு மாகாண சபை பதில் கூறவேண்டும் - மாவை சேனாதிராஜா
வடக்கு ஆளுநரின் மீள்குடி யேற்றம் தொடர்பிலான கருத் துக்கு வடக்கு மாகாணசபை பொறுப்புச் சொல்ல வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை. சேனாதிராஜா தெரிவித்தார்.
வடக்கு மாகாணசபையின் அமர்வில் முதன்மை உரை யாற்றிய வடக்கு ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி, வட மாகாணத்தில் மீள் குடியமர்வு நடவடிக்கைகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். இந்த நிலையில் வலி. வடக்கு மக்கள் நடத்திவரும் வாழ்வுரிமைப் போராட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய நடாளுமன்ற உறுப்பினர், வலி.வடக்கில் மாத்திரம் 24 கிராம சேவையாளர் பிரிவுகளில் மக்கள் இன்னமும் மீள் குடியமர்த்தப்படவில்லை.
இவ்வாறானதொரு நிலையில் வடக்கு ஆளுநர் இவ்வாறு தெரிவித்திருப்பதானது உண்மையை மறைக்கும் செயல். இதற்கு மக்களால் தேர்வு செய்யப்பட்ட வடக்கு மாகாணசபையும் பொறுப் புக்கூற வேண்டும் என்றார்.
வடமாகாண ஆளுநரின் கருத்துக்கு மாகாண சபை பதில் கூறவேண்டும் - மாவை சேனாதிராஜா
Reviewed by NEWMANNAR
on
November 14, 2013
Rating:
Reviewed by NEWMANNAR
on
November 14, 2013
Rating:


No comments:
Post a Comment