இரண்டாம் தர பிரஜைகளாக வாழ்வதற்கு நாம் தயாரில்லை: இரா.சம்பந்தன்.
இந்த நாட்டில் இரண்டாம் தர பிரஜைகளாக வாழ்வதற்கு நாம் தயாரில்லை , பொருளாதார கலாசார
ரீதியாக நாம் தனித்துவமானவர்கள் . எங்களை நாங்களே ஆளுகின்ற அதிகாரத்தை கேட்பதில் எந்த தவறும் இல்லை . எங்களுடைய நியாயமான கோரிக்கையை இனியும் நிராகரிக்க முடியாது அத்துடன் ஆயுதப் போராட்டத்தை நாங்கள் விரும்பவில்லை என்று தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுக்களின் தலைவர் இரா . சம்பந்தன் தெரிவித்தார் .
திருகோணமலை சம்பூர் மக்கள் அகதிகளாக தங்க வைக்கப்பட்டுள்ள கிளிவெட்டி இடைத்தங்கல் முகாமில் நேற்று சனிக்கிழமை காலை 9.00 மணிமுதல் 11 மணிவரை கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்று இடம்பெற்றது .
தமிழ்தேசிய கூட்டமைப்பினரும் சம்பூர் மக்களும் இணைந்து இப்போராட்டத்தை முன்னெடுத்தனர் .
மக்களும் மக்கள் பிரதிநிதிகளும் பதாதைகளை ஏந்தி கவன ஈர்ப்பு போராட்டத்தை மேற்கொள்ள முற்பட்ட போதும் பொலிசார் அவர்களை தடுத்து நிறுத்தினர் . தடுத்தனர் அரச காணியில் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம் நடத்த முடியாது என தடைவிதிக்கப்பட்டது .
அதனையடுத்த அமைதியான முறையில் கவன ஈர்ப்பு போராட்டம் இடம் பெற்றது .
அங்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுத் தலைவரும் திருகோணமலை நாடாளுமன்ற உறுப்பினருமான இரா . சம்பந்தன் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார் .
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் ,
எப்போதும் இல்லாத அளவிற்கு எமது பிரச்சினை சர்வதேச மயப்படுத்தப்பட்டுள்ளது . ஐக்கிய நாடுகள் சபையில் முக்கியதுவம் பெற்று மனித உரிமை பேரவையில் எமது பிரச்சினை எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது .
சம்பூர் நிலங்களில் சரித்திர ரீதியாக பல நூறு ஆண்டுகளாக நீங்கள் பரம்பரையாக வாழ்ந்து வருகின்றீர்கள் .
கொட்டியார துறைமுக வாயிலில் வெருகல் வரை தமிழ் பேசும் மக்கள் அதுவும் தமிழ் மக்கள் அதிகமாக வாழ்ந்து வருகின்றார்கள் 1881 ஆம் ஆண்டு கணக்கெடுகளின் படி பெரும்பான்மை இனத்தவர்கள் 11 பேர் மட்டுமே வாழ்ந்துள்ளார்கள் அவர்கள் அனைவரும் ஆண்கள் ஆவர் . அவர்கள் பேக்கரியில் வேலைக்கு வந்தவர்கள் என்றார் .
சம்பூர் மக்களின் பிரச்சினை தொடர்பாக நாம் நாடாளு மன்றத்தில் பேசிய போது பொருளாதார அமைச்சர் பசில் ராஜபக்ச குறுக்கிட்டு அனல் மின் நிலையத்திற்கு ஒதுக்கப்பட்ட 500 ஏக்கர் காணிகளைத் தவிர ஏனைய பகுதிகளில் மக்கள் குடியோற்றப்படுவார்கள் என உறுதி மொழி வழங்கிய போதும் அது இன்று வரை நிறைவேற்றப்பட் வில்லை .
கூனித்தீவு நவரட்ணபுரம் குடியேற்ற பட்ட போது சம்பூர் மக்களும் குடியேற்றப்படுவார்கள் என எண்ணினோம் ஆனால் அது நடைபொறவில்லை .
உலகத் தலைவர்களுடனும் சம்பூர்விடயம் பற்றி பேசி வருகின்றோம் தென்னாபிரிக்க ஜனாதிபதியை சந்தித்து நாளை பேசவுள்ளோம் சம்பூர் மக்களான நீங்கள் உறுதியுடன் இருங்கள் இதுவே முக்கியம் எமது போராட்டம் தொடரும் நாங்கள் ஓயமாட்டோம் . எமது மக்கள் சம உரிமையுடன் வாழும் வரை நாம் ஓயப்போவதில்லை என்றார்
இரண்டாம் தர பிரஜைகளாக வாழ்வதற்கு நாம் தயாரில்லை: இரா.சம்பந்தன்.
Reviewed by NEWMANNAR
on
November 17, 2013
Rating:
Reviewed by NEWMANNAR
on
November 17, 2013
Rating:


No comments:
Post a Comment