விம்பம் பகுதியில் மன்னார் உப்பளம் பற்றிய தகவல் - படங்கள் வீடியோ
75 வருட பழமை வாய்ந்த மாந்தை சோல்ட் லிமிட்டட் கடந்த காலங்களில் பல்வேறு பெயர் மாற்றங்களுடன் மாந்தை சோல்ட் லிமிட்டட் செயற்பட்டு வந்துள்ளது.
அதன் படி 1938 தொடக்கம் 1965 வரை உப்பு திணைக்களமாக இயங்கிவந்தது.
அதன் பின் 1966 தொடக்கம் 1990 ம் ஆண்டுவரை காலம் இலங்கை தேசிய உப்பு கூட்டத்தாபனமாக விளங்கியது.
அதன்பின் 1991 தொடக்கம் 1996 வரை லங்கா சேல்ட் என்ற பெயர் மாற்றத்துடன் இயங்கி வந்தது.
பின் நாட்டில் ஏற்ப்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக பல பின்னடைவுகள் ஏற்பட்டிருந்தன. இதனை தொடர்ந்து 1996 தொடக்கம் 2001 வரை மன்னார் உப்பு லிமிட்டட் என்று பெயர் மாற்றமடைந்தது இயங்கி வந்தது
அதனை தொடர்ந்து 2001 முதல் மாந்தை உப்பு லிமிட்டட் என்ற பெயரில் இயங்கிவருகிறது.
வட மாhணத்தில் இருக்கின்ற ஒரே ஒரு உப்பளம் இதுவாகும்
இம் மாந்தை உப்பு லிமிட்டட் மூலம 89 பேர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். இதில் பெண்களே கூடுதலான பங்கு வகிக்கின்றனர்.
கடந்த காலங்களில் வருடத்திதிற்கு 3500 மேற்றிக்தொன் உற்பத்தியை இலக்காகக் கொண்டு இவ் உப்பளம் இயங்கிவந்தது.
எனினும் 2009ம் ஆண்டிற்கு பின் நாட்டில் ஏற்பட்ட சாதகமான சமாதான சுழலினை அடுத்து பல அபிவிருத்தி திட்டங்கள் இங்கு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன் படி படிப்படியாக உப்பு உற்பத்தியை அதிகரிப்பதற்கான பல திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டது. இதற்கான அபிவிருத்தி திட்டங்ளை அரசாங்கம் உரிய முறையில் செயல்முறை படுத்திவந்தது.
இன்நிலையில் 2010 ம் ஆண்டு வர்த்தக கைத்தொழில் அமைச்சினால் 25 மில்லியன் உப்பள அபிவிருத்திக்கென வழங்கப்பட்டது.
இதன் மூலம் பாரிய உவர் நீர் காச்சல் பாத்திகள் ,கடலில் இருந்து நீர் இறைக்கும் பாரிய இயந்திரங்கள்,பாரிய மின்மாற்றிகள், இரசாய இயந்திரங்கள் மற்றும்; பல அபிவிருத்திக்கான மூலக்கூறுகள் என்பன கொள்வனவு செய்யப்பட்டடுள்ளன.
கொள்வனவு செய்யப்பட்ட மூலக்கூற்றுகள் மூலம் உப்பு உற்பத்தி அதிகரிக்கப்பட்டுள்ளது..
இதன்படி உப்பிற்கான வருட உற்பத்தி 6000 மேற்றிக்தொன்னாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இங்கு உற்பத்திசெய்யப்யும் உப்புக்கள் தரம் பிரிக்கப்பட்டு கவர்ச்சிகரமான பக்கற்றுகளில் அடைக்கப்பட்டு மொத்தவிற்பனை செய்யப்படுகிறது.
நாட்டின் பல பாகங்களுக்கும் அனுப்பிவைக்கப்பட்டு விற்பனை செய்யப்படும் இவ் உப்பு இலங்கை தரகட்டுபாட்டு சபையின் சான்றிழின் அடிப்படையில் சுகாதாரமான தரமான உப்பு ஏற்றுமதி செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
விம்பம் பகுதியில் மன்னார் உப்பளம் பற்றிய தகவல் - படங்கள் வீடியோ
Reviewed by Author
on
November 17, 2013
Rating:

No comments:
Post a Comment