பொதுநலவாய நாடுகளின் கூட்டத்திற்கு இந்திய பிரதமரை நான் அழைக்கவில்லை: மன்னார் ஆயர் வண. இராயப்பு ஜோசப் - 2ம் இணைப்பு
CHOGM மாநாடு தொடர்பில் எனது நிலைப்பாடு தொடர்பான தெளிவுபடுத்தல்.
மேற்படி விடயம் தொடர்பில் என்னை மேற்கோள் காட்டி எனக்கு இணக்கம் இல்லாத சில செய்திகள் வெளிவந்துள்ளமையால் இம் மாநாடு தொடர்பில் பின்வரும் விடயங்களைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.
பொதுநலவாய நாடுகளின் கூட்டத்திற்கு இந்திய பிரதமரை நான் அழைக்கவில்லை: மன்னார் ஆயர் வண. இராயப்பு ஜோசப்
மேற்படி விடயம் தொடர்பில் என்னை மேற்கோள் காட்டி எனக்கு இணக்கம் இல்லாத சில செய்திகள் வெளிவந்துள்ளமையால் இம் மாநாடு தொடர்பில் பின்வரும் விடயங்களைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.
1. சர்வதேச சமூகத்தின் மத்தியில் இலங்கையை ஒரு பொறுப்புள்ள நாடாகக் காட்டிக் கொள்ளுவதற்காகவே CHOGM மாநாடு கொழும்பில் கூட்டப்படுகின்றது. தமிழர்களுக்கெதிராக தொடர்ந்து கட்டவிழ்த்து விடப்படும் இனப்படுகொலை நடவடிக்கைகள் காரணமாக கொழும்பில் இம்மாநாடு நடத்தப்படுவது பொருத்தமில்லை என நான் கருதுகிறேன். கொழும்பில் இம்மாநாடு நடாத்தப் படுவது பொதுநலவாய நாடுகளின் பட்டயத்திற்கு (Commonwealth Charter) முரணானது எனவும் நான் கருதுகிறேன். பேராயர் தெச்மண்ட் டுட்டு (Desmond Tutu) குறிப்பிட்டுள்ளவாறு CHOGM மாநாட்டிற்கு வராமல் விடுவதன் மூலமே இலங்கைக்குப் பொருத்தாமான செய்தியை விடுக்கலாம் என நான் கருதுகிறேன்.
2. வட மாகாண முதலமைச்சர் கௌரவ C.V. விக்கினேஸ்வரனின் அழைப்பை ஏற்று கௌரவ இந்தியப் பிரதமர் தமிழ்ப் பகுதிகளுக்கு விஜயம் செய்ய வேண்டும்.
ஆனால் இது CHOGM மாநாட்டில் இந்தியப் பிரதமர் கலந்து கொள்வதற்கான அழைப்பாகக் கருதப்படக்கூடாது.
அதி வணக்கத்துக்குரிய ஆயர்,
கலாநிதி. இராயப்பு யோசப்
மன்னார் ஆயர்
பொதுநலவாய நாடுகளின் கூட்டத்திற்கு இந்திய பிரதமரை நான் அழைக்கவில்லை: மன்னார் ஆயர் வண. இராயப்பு ஜோசப்
'பொதுநலவாய மாநாட்டில் தலைவர்களின் வருகை பற்றி என்னிடம் அபிப்பிராயம் என்ன என்று கேட்டார்கள்.
அதற்கு நான் அவர்களுக்கு தெளிவாக கூறியது, போர் காலத்திலே நடந்தேறிய மனித இன படுகொலைகள் மனித உரிமை மீறல்கள் மனிதாபிமான சட்ட மீறல்கள் இவற்றை எல்லாம் போரின் போது இலங்கை நாடு செய்து முடித்துவிட்டு நாம் போரை முன்னெடுத்தது பயங்கரவாதிகளை அழிப்பதற்காக என்று சொல்லிக்கொண்டு இருப்பதை சரியென்று ஏற்றுக்கொள்வதாக அவர்களுடைய வருகை அமையும் என்றும்
அத்துடன் சர்வதேச சமுகமும் ஐநாவும் இலங்கை தனது நல்லினக்கப்பயணத்திலே அர்த்தமுடன் ஈடுபடக்கூடியதாக அமைய இன ஒழிப்பையும் மனித உரிமை மீறல்களையும் நம்பகத்தன்மையாக விசாரித்து இந்த இன ரீதியான துரோகங்களை ஏற்றுக்கொண்டு பொறுப்புகூறவேன்டும் என்பதற்கு செவிமெடுக்கத்தேவையில்லை என்பதையும் இந்த செய்தியையும் கொடுத்ததாக அமையும்.
எனவே இந்திய பிரதமர் இந்த கூட்டத்திலே பங்குபற்றுவதை நான் விரும்பவில்லை. ஆனால் இந்திய பிரதமர் அவர்கள் யாழ்ப்பானத்திற்கு வந்து அங்கே இந்தியாவின் முக்கியமான ஒத்துழைப்புடன் அரங்கேற்றப்பட்ட போர் குற்றங்களையும்; மனித உரிமை மீறல்கள் மனிதாபிமானமற்ற செயல்கள்; என்பவற்றை கண்னால் பார்த்து பாதிக்கப்பட்ட மக்கள் எழுப்பும் குரலுக்கு செவிமெடுப்பது மிகவும் வரவேற்கத்தக்கது.
அவர் அதை செய்வதற்கு யாழ்ப்பாணத்திற்கு வருகைதர வேண்டும் என்றே நான் கூறியிருந்தேன்.
ஆனால் இதற்கு மாறாக ஊடகங்களில் நான் அறிக்கையிட்டதாக பத்திரிகைகளில் காட்டப்பட்டுள்ளது. நான் இந்திய பிரதமர் அவர்களை பொதுநலவாய நாடுகளின் கூட்டத்திற்கு வரவேண்டும் என்று சொன்னதாக தீயநோக்கோடு வெளியிட்டு இருக்கிறார்கள்.
இதை நான் முற்றும் முழுமையாக நிராகரிக்கிறேன். யாழ்ப்பணத்திற்கு வரவேண்டும் என்பதை திரிவுபடுத்தி பொதுநலவாய மாநாட்டிற்கு வரவேண்டும் என்று சொல்வது மிகவும் அப்பட்டமான பொய் என்றும் உண்மைக்கு மாறான செயல் என்று குறிப்பிட விரும்புகிறேன்.' என மன்னார் ஆயர் யோசேப்பு ஆண்டகை இவ்வாறு தெரிவித்தார்.
பொதுநலவாய நாடுகளின் கூட்டத்திற்கு இந்திய பிரதமரை நான் அழைக்கவில்லை: மன்னார் ஆயர் வண. இராயப்பு ஜோசப் - 2ம் இணைப்பு
Reviewed by NEWMANNAR
on
November 09, 2013
Rating:

No comments:
Post a Comment