பல்லாயிரம் மக்கள் புடை சூழ முள்ளிவாய்க்கால் முற்றத்தின் நிகழ்வுகள் எழுச்சியுடன் ஆரம்பம் (photos)
தமிழக அரசின் மாணவர் கைது உள்ளிட்ட பல்வேறு அடக்கு முறைக்கு மத்தியில் தமிழக மாணவர்கள் தங்கள் முள்ளிவாய்க்கால் பரப்புரை சுடரினை முள்ளிவாய்க்கால் முற்றத்திற்கு கொண்டு சென்றுள்ளார்கள்.
தமிழ்நாட்டில் ஐந்து இடங்களில் இருந்து மாணவர்களின் சுடர் பயணம் தொடங்கப்பட்ட போது அதனை தமிழக காவல்துறையினர் தடுத்து மாணவர்களை கைது செய்துள்ளதுடன் சுடர் பயணத்திற்கு தடை விதித்துள்ளார்கள்.
இந்நிலையில் மாணவர்களால் ஏற்றப்பட்ட சுடர் முள்ளிவாய்க்கால் வரை செல்ல வேண்டும் என்ற இலக்கிற்கு அமைவாக நீலகிரி மாவட்டத்தில் ஏற்றப்பட்ட சுடர் தமிழக காவல்துறையின் பல்வேறு அச்சுறுத்தலுக்கு மத்தியில் இரகசியமான முறையில் பரப்புரையினை மாணவர் பிரபா தலைமையில் இன்று பிற்பகல் சுடரினை ஏந்தியவாறு முள்ளிவாய்க்கால் முற்றத்தினை சென்றுள்ளார்கள்.
விடுதலை உணர்வுடன் பல்வேறு கோசங்களை தாங்கியவாறு முள்ளிவாய்க்கால் முற்றத்தினை சென்றடைந்துள்ளார்கள்.அங்கு சுடரினை பழ.நெடுமாறன், உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன், மாவை சேனாதிராசா, பொ.மணியரசன் உள்ளிட்ட தமிழ் அமைப்பு தலைவர்கள் சுடரினை ஏற்றுக்கொண்டுள்ளார்கள்.
இந்நிகழ்வில் மதிமுக பொதுச் செயலாளர் வை.கோபாலசாமி, பற்றும் பல தலைவர்களும் இலங்கையிலிருந்து சென்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான சி.சிறிதரன் மற்றும் சுரேஸ் பிரேமச்சந்திரன் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாணசபை உறுப்பினர் பசுபதிப்பிள்ளை, ரவிகரன் தமிழ்த் தேசிய முன்னணி செயலாளர் செ.கஜேந்திரன் ஆகியவர்களும் முதல் நாள் நிகழ்வில் பங்குபற்றியுள்ளனர்.
பல்லாயிரம் மக்கள் புடை சூழ முள்ளிவாய்க்கால் முற்றத்தின் நிகழ்வுகள் எழுச்சியுடன் ஆரம்பம் (photos)
Reviewed by NEWMANNAR
on
November 09, 2013
Rating:

No comments:
Post a Comment