பிரித்தானிய பிரதமர் அலுவலக ஊடகவியலாளர்கள் பட்டியலின் கீழ் கெலும் மக்ரே இலங்கை வருகிறார்!
பிரித்தானிய பிரதமரின் அலுவலகத்தினால் சமர்ப்பிக்கப்பட்ட 30 ஊடகவியலாளர்களின் பெயர் பட்டியலில் சனல் 4 தொலைக்காட்சியின் ஊடகவியலாளர் கெலும் மக்ரே பெயர் இருந்ததன் காரணமாகவே இலங்கை அரசாங்கம் அவருக்கு விசா அனுமதியை வழங்க நேர்ந்ததாக தெரியவருகிறது.
இலங்கை அரசின் போர்க் குற்றங்களை விபரிக்கும் இலங்கையின் கொலைக்களம் மற்றும் போர் தவிர்ப்பு வலயம் ஆகிய விவரணப் படங்களை நெறிப்படுத்தியவர் மக்ரே.
கொழும்பில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் மாநாடு தொடர்பான செய்தி சேகரிப்புக்காக மக்ரே விசா கோரி விண்ணப்பித்திருந்தார். எனினும் அரசாங்க அதிகாரிகள் அவருக்கு விசா வழங்க எந்த முயற்சிகளையும் மேற்கொள்ளவில்லை.
இந்த நிலையில் பிரதமர் டேவிட் கமரூனின் அலுவலகம் வழங்கிய பொதுநலவாய மாநாடு தொடர்பான செய்தி சேகரிப்பிற்காக வரும் ஊடகவியலாளர் பட்டியலில் மக்ரேவின் பெயரும் இருந்தது.
இந்த நிலைமையில் கெலும் மக்ரே இலங்கை வருவதற்கு விசா அனுமதி வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.
பொதுநலவாய நாடுகளின் மாநாடு இலங்கையில் நடத்தப்படுவது தொடர்பில் தான் மிகவும் கவலையடைவதாக மக்ரே பிரித்தானிய ஊடகங்களிடம் அண்மையில் தெரிவித்திருந்தார்.
மனித உரிமை, நியாயம் மற்றும் சட்டம் தொடர்பில் வழிகாட்டும் விடயங்கள் சம்பந்தமாக பொதுநலவாயத்தின் பொறுப்புகள் குறித்து அழுத்தங்களை கொடுக்கும் பொறுப்புகளுக்கு இலங்கை தலைமையேற்க உள்ளமை தொடர்பில் அவர் விசனம் வெளியிட்டிருந்தார்.
பிரித்தானிய பிரதமர் அலுவலக ஊடகவியலாளர்கள் பட்டியலின் கீழ் கெலும் மக்ரே இலங்கை வருகிறார்!
Reviewed by Author
on
November 10, 2013
Rating:

No comments:
Post a Comment