அண்மைய செய்திகள்

recent
-

எதிர்காலத்தை மாற்றியமைக்கப்போகும் எமது இளைய சமூதாயத்தின் தேவைகளை பூர்த்தி செய்து அவர்களை பாதுகாக்கும் எமது முயற்ச்சி பிற்போடபட்டுவிடக்கூடாது;:மன்னார் மாவட்ட செயலாளர் தேசபிரிய


அண்மையில் உலக சிறுவர் தின பேரணியை ஆரம்பித்துவைத்து நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றிய மன்னார் அரச அதிபர் எம்.வை.எஸ்.தேசபிரிய  தெரிவிக்கையில்

 சிறுவர்தின நிகழ்வுகளை பல்வேறு நாடுகள் வௌ;வேறு தினங்களில் கொண்டாடுகின்றார்கள்  .இன்றைய சிறுவர்கள் நாளைய தலைவர்கள் இன்றைய குழந்தைகளின் கைகளில்தான் நம் நாட்டின் நாளைய எதிர்காலம் தங்கியுள்ளது அத்தகைய குழந்தைகளை சரியான முறையில் வளர்க்காவிட்டால் நம் நாட்டின் எதிர்காலம் விழ்ச்சி அடையும்
சிறுவர்கள் மட்டில் எமது கடமைகள் பொறுப்புகள் என்ன என்பதைபற்றி  நாம் யோசிக்க வேண்டும்.
கடந்த வருடத்தில் அவர்களுக்காக நாம் என்ன செய்தோம் வருகின்ற வருடத்தில் என்ன செய்யப்போகின்றோம் ஏனென்றால் இன்றைய சிறுவர்கள் நாட்டின் எதிர்கால குடிமக்கள். ஆகவே நம் நாட்டின் எதிர்காலம் ஒவ்வொரு சிறுவர்களின் கைகளிலும் தங்கியிருக்கின்றது. எமது சமூகத்திலுள்ள ஓவ்வொரு தனி மனிதனுக்கும் சிறுவர்கள் மட்டில் முக்கிய கடமைகள் இருக்கின்றது.

இன்றைய சிறுவர்கள் மட்டில் எமது அன்பு கவனிப்பு நாளுக்குநாள் அதிகரித்துகொண்டு செல்லவேண்டும் ஏன்னெனில் இன்று பல சிறுவர்கள் வௌ;வேறு வழிகளில் பிழையாக வழிநடத்தப்படுகின்றனர்.

 எதிர்காலத்தை மாற்றியமைக்கப்போகும் எமது இன்றைய இளைய சமூதாயத்தின் தேவைகளை பூர்த்தி செய்து அவர்களை பாதுகாக்கும் எமது முயற்ச்சி பிற்போடபட்டுவிடக்கூடாது. எமது அரசாங்கம் சிறுவர் பாதுகாப்பை அதிகரிக்கும் முயற்ச்சியில் ஈடுபட்டுகொண்டிருக்கின்றது. தேவை ஏற்படும் போது உடனுக்குடன்  சட்டரீதியாக பதில் சொல்கின்றது

வடக்கில் 30 வருட காலமாக சிறுவர்கள் புறக்கணிக்கப்பட்டு போருக்கு பயன்படுத்தப்பட்டார்கள். ஆனால் நாம் எல்லோரும்  சுதந்திரகாற்றை சுவாசிக்கின்றோம். இதற்காக நாம் எமது ஜனாதிபதிக்கு  நன்றி கூறவேண்டும். ஜனாதிபதி உங்கள் தேசத்தின் தந்தை அவர் இந்த நாட்டை உங்களுக்காக கட்டியெழுப்புகிறார். அவர் உங்களை எவ்வளவு நேசின்கிறார் என இப்பொழுது உங்களக்கு தெரியும்

ஆகவே எமது நாட்டின் எதிர்காலம் எமது குழந்தைகள் அதனால் ஒவ்வொருசிறுவர்களுக்கும் இந்த நாள் மிக முக்கியமான நாள். அவர்கள் இந்த அழகான நாட்டின் எதிர்கால தலைவர்கள்.  


எதிர்காலத்தை மாற்றியமைக்கப்போகும் எமது இளைய சமூதாயத்தின் தேவைகளை பூர்த்தி செய்து அவர்களை பாதுகாக்கும் எமது முயற்ச்சி பிற்போடபட்டுவிடக்கூடாது;:மன்னார் மாவட்ட செயலாளர் தேசபிரிய Reviewed by Author on November 19, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.