அண்மைய செய்திகள்

recent
-

இறுதி நேரத்திலாவது மன்மோகன் வரமாட்டாரா?

பொதுநலவாய மாநாட்டில் இந்திய பிரதமர் இறுதிக் நேரத்திலாவது பங்கேற்பார் என நம்புவதாக அரசாங்கத்தின் அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ஹெகலிய ரம்வெல்ல தெரிவித்தார். 

கனடா பிரதமர் அவர் சார்பில் பிரதிநிதிகள் குழு ஒன்றை அனுப்ப தீர்மானித்த நிலையில், இந்திய பிரதமரும் தனது குழுவினரை அனுப்பி வைப்பதாக அவர் குறிப்பிட்டார். 

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வராந்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று (11) அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். 

அங்கு மேலும் பேசிய அமைச்சர் ஹெகலிய ரம்வெல்ல, 

நாடு என்ற அடிப்படையில் பொதுநலவாய மாநாட்டிற்கு அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அழைப்பு விடுக்கப்பட்டவர்கள் பங்கேற்காமை கவலையளிக்கிறது. 

37 நாடுகளின் தலைவர்கள் தமது வருகையை உறுதி செய்துள்ளனர். யாரும் வராவிட்டால் மாநாட்டிற்கு எந்த பங்கமும் ஏற்படாது. 

பிரித்தானிய பிரதமரின் 30 பேர் அடங்கிய குழுவில் கலம் மெக்ரே அடங்குகிறார். 

29 பேருக்கு வீசா அளித்துவிட்டு அவருக்கு மாத்திரம் கொடுக்காதிருக்க முடியாது. 

செனல் 4 நிகழ்ச்சி தயாரிப்பாளர் தொடர்பில் பிரச்சினைகள் காணப்படுகின்ற போதும் அவர் இலங்கைக்கு வந்து உண்மை நிலையை அறிந்து, தமது பிழையை திருத்திக் கொள்வார் என நம்புகிறோம். 

சுற்றுலா வீசாவில் இலங்கை வந்து ஊடக சந்திப்பு நடத்த முயன்ற அவுஸ்திரேலிய ஊடகவியலாளர்கள் இருவர் நாடு கடத்தப்பட்டமை தொடர்பில் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அமைச்சர், 

நபர்களை விட நீதி மேலானது என்றார். 

இதேவேளை சுற்றுலா வீசாவில் வந்த ஜேம்ஸ் பெக்கர் இலங்கை வர்த்தக மாநாட்டில் உரையாற்றியபோது அந்த சட்டம் செல்லுபடியாகாதா என இங்கு கேள்ளி எழுப்பப்பட்டது. 

சுற்றுலா வீசாவில் வந்தாலும் வர்த்தக நடவடிக்கை குறித்து பேச்சுவார்த்தை நடத்துவது பிரச்சினையற்றது என அமைச்சர் பதிலளித்தார். 

கெசினோ குறித்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர்,

தலா 100 மில்லியன் செலுத்தி நால்வர் கெசினோ திட்டத்திற்கு அனுமதிப்பத்திரம் பெற்றுள்ளனர் என்றார். 

இவர்களைத் தவிர வேறு எவருக்கும் கெசினொ வர்த்தகம் தொடங்க இடமளிக்கப்பட மாட்டாது என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ஹெகலிய ரம்வெல்ல தெரிவித்தார்.

இறுதி நேரத்திலாவது மன்மோகன் வரமாட்டாரா? Reviewed by Author on November 11, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.