விடத்தல் தீவு 'நாயாற்று' பகுதியில் அனுமதியின்றி அமைக்கப்படும் உப்பள நடவடிக்கையை நிறுத்த கோரிக்கை.
வாசிகள் அனுமதியின்றி உப்பளம் அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக விடத்தல்தீவு கிழக்கு கிராம அபிவிருத்திச்சங்கத்தின் தலைவர் பொ . சிவேந்திரன் தெரிவித்தார் .
இது தொடர்பாக விடத்தல் தீவு கிழக்கு கிராம அபிவிருத்திச்சங்கம் வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் அவர்களுக்கு கடிதம் ஒன்றையும் அனுப்பி வைத்துள்ளனர் .
குறித்த கடிதத்தில் ; மேலும் குறிப்பிடுகையில் ,,,,
விடத்தல் தீவு கிழக்கு கிராம சேவையாளர் பிரிவுக்குற்பட்ட ' நாயாற்று ' பகுதியில் உள்ள 50 ஏக்கர் நிலப்பரப்பைக் கொண்ட உப்புத்தரவையில் சில வெளியூர் வாசிகள் கிராம அலுவலகரின் அனுமதியின்றி உப்பளம் அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர் .
இவ்விடையம் எமக்கு மிகவும் கவலையையும் இ வேதனையையும் அளிக்கின்றது . அத்துடன் விவசாய நிலங்களும் அதில் உள்ளடக்கப்படுகின்றது .
எனவே உடனடியாக குறித்த நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும் . விடத்தல் தீவு கிழக்கு கிராம அலுவலகர் பிரிவுக்குற்பட்ட அனைத்து அரச காணிகளையும் அடையாளம் கண்டு எமக்கு தெரியப்படுத்துவதோடு கிராம அலுவலகரின் பகுதிக்குள் நடை பெறும் எந்த நடவடிக்கையாக இருப்பினும் எமது அனுமதியையும் பெற்றிருக்க வேண்டும் என்கின்ற நடை முறையை சம்பந்தப்பட்டவர்களுக்கு அறியப்படுத்துமாறு கேட்டுக்கொள்ளுகின்றோம் .
என குறிப்பிடப்பட்டுள்ளது .
அதன் பிரதிகள் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் இ வடமாகாண அமைச்சர் பா . டெனிஸ்வரன் இ காணி விவகாரங்களுக்காண வடமாகாண சபை உறுப்பினர் வைத்திய கலா நிதி ஜீ . குணசீலன் ஆகியோருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது .
விடத்தல் தீவு 'நாயாற்று' பகுதியில் அனுமதியின்றி அமைக்கப்படும் உப்பள நடவடிக்கையை நிறுத்த கோரிக்கை.
Reviewed by Author
on
November 26, 2013
Rating:
No comments:
Post a Comment