திருக்கேதீஸ்வரம் தேவஸ்தானத்தில் தீபாவளி சிறப்பு பூஜைகள் -படங்கள்
உலகெங்கிலுமுள்ள இந்துக்கள் இன்று தீபாவளி திருநாளினை வெகுசிறப்பாக கொண்டாடுகின்றனர்.
இன்று மன்னாரிலும் இந்துக்கள் தீபாவளி திருநாளினை வெகுவிமர்சையாக கொண்டாடுகின்றனர்.
இதனை சிறப்பிக்கும் முகமாக மன்னாரில் பல இந்துக் கோவில்களில் விசேட பூஜைகள் நடைபெற்றுள்ளது.
மன்னார் திருக்கேதிஸ்வரம் கோவிலில் இன்று காலை 7:35 மணிக்கு தீபாவளி திருநாளுக்கான சிறப்பு பூஜை நடைபெற்றது.
இதனை திருக்கேதீஸ்வர கோவில் சிவாச்சாரியார் பாலசுப்பிமணியம் மற்றும் திருக்கேதிஸ்வர கோவில் பிரதம குரு கருணானந்த குருக்கள் நடத்தியிருந்தனர்.
தீபதிருநாளிலே இறைவனின் அருளினை பெற பக்தர்கள் ஒன்று சேர்ந்து பூஜை வழிபாட்டில் ஈடுபட்டனர்
திருக்கேதீஸ்வரம் தேவஸ்தானத்தில் தீபாவளி சிறப்பு பூஜைகள் -படங்கள்
Reviewed by Author
on
November 02, 2013
Rating:
No comments:
Post a Comment