மன்னார் நகரசபை நிதியின் ஊடாக அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுப்பு: நகரசபை உறுப்பினர் இரட்ணசிங்கம் குமரேஸ் -படங்கள்
இதன் அடிப்படையில் மன்னார் நகரப்பகுதியில் அமைந்துள்ள சிறுவர் பூங்காவிற்கு அருகாமையில் பல லட்சம் ரூபாய் செலவில் கடை தொகுதி ஒன்று அமைக்கப்பட்டு வருகின்றது.
இதன்படி முதற்கட்டமாக 21 கடைகள் அமைக்கப்பட்டு வருகின்றது இதேவேளை மொத்தமாக 40 கடைகள் இங்கு அமைக்கப்படவுள்ளது.
தலா ஒவ்வொன்றும் 10 அடி நீளமும் 10 அடி அகலமும் உடையதாக அமைக்கப்படும் குறித்த கடை ஒன்றிற்கு ஒரு லட்சத்தி ஜயாயிரம் ரூபா(105000) செலவிடப்படவுள்ளது.
மிக துரித கதியில் நடைபெற்று வரும் குறித்த கடையமைக்கும் வேலைகள் இன்னும் ஒரு வாரத்தில் நிறைவடையவுள்ளது.
இவ் வேலைகள் நிறைவடைந்த பின் மன்னார் நகரசபைக்கு சொந்தமான சந்தைபகுதியில்; அமைக்கப்பட்டுள்ள கடைகள் அகற்றப்பட்டு புதிதாக அமைக்கப்பட்டு வரும் குறித்த கடை தொகுதியிற்கு மாற்றப்படவுள்ளது.
இதேவேளை மன்னார் நகரசபையிற்கு சொந்தமான பழைய சந்தைப்பகுதியிலிருந்து மாற்றப்படும் கடைகள் புதிதாக அமைக்கப்பட்டு வரும் கடைத் தொகுதியிற்கு மாற்றப்பட்ட பின் பழைய சந்தைப்பகுதி; வாராந்த (சனி,ஞாயிறு) பொது சந்தையாக மாற்றப்படவுள்ளது.
இதன் மூலம் உள்ளுர் உற்பத்தியாளர்கள் மற்றும் வெளியூர் உற்பத்தியாளர்களின் உற்பத்தி நடவடிக்கைகளை ஊக்குவிப்பதோடு குறித்த சந்தை பகுதியில் தமது வியாபார நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்ல ஓரு களமாக அமைத்து கொடுக்கப்பட்டுள்ளது.
புதிதாக அமைக்கப்படும் கடை ஒன்றிற்கு 500 000 லட்சம் ரூபா பெறப்பட்டு மன்னாரை நிரந்தர வதிவிடமாக கொண்ட வியாபாரிகளுக்கு கடைகள் நிரந்தரமாக வழங்கப்படவுள்ளது. எனினும் குறித்த கடைகள் வெறோருவருக்கு கை மாற்ற முடியாதது குறிப்பிடத்தக்கது.
குறித்த கடைகளுக்கான அனைத்து அபிவிருத்தி வேலைத்திட்டங்களும் நகரசபையின் அனுமதியுடன் மேற்கொள்ளப்பட்டு வருவதோடு நகரசபையின் தலைவர் திரு.ஞானபிரகாசம் மற்றும் நகரசபை செயலாளர் திரு.பிறிற்டோ அவர்களின் வழிநடத்தலின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
குறிப்பாக தற்பொழுது நகரசபையிற்கு சொந்தமான பழைய சந்தைப்பகுதியில் அமைந்துள்ள தற்காலிக கடைகள் இரண்டு வருடத்திற்கு முன் தீ விபத்தக்குள்ளாகி எரிந்து நாசமாகியிருந்தது. இதனால் வியாபாரிகள் மிகவும் பாதிக்கப்பட்டிருந்தனர். இன்நிலையினை கருத்திற் கொண்டு தீ விபத்துக்கள்ளாகியிருந்த கடைகளின் உரிமையாளர்களிடமிருந்து கடந்த இரண்ட வருடமாக குத்தகை எதுவும் அறவிடப்படவில்லை
இதனால் மன்னார் நகரசபையிற்கு பாரிய நட்டம் ஏற்பட்டுள்ளது. ஏற்பட்ட நட்டத்தையும் பொருட்படுத்தாது மன்னார் நகர சபை பாதிக்கப்பட்ட வியாபாரிகளுக்கு பல சேவைகளை செய்து வந்துள்ளது.
இருந்த போதிலும் ஏற்பட்ட நஸ்டத்தினை நிவர்த்தி செய்ய இவ்வாறான நடவடிக்கைகளை நகரசபைக்கூடாக நாம் மேற் கொள்ளவுள்ளோம் என தெரிவித்த மன்னார் நகரசபை உறுப்பினர் திரு.இரட்ணசிங்கம் குமரேஸ் மேலும் தெரிவிக்கையில்
எதிர்வரும் கிறிஸ்மஸ் பண்டிகைக்காலத்தில் மன்னார் சிறுவர் பூங்கா பிரதான வீதியில் உள்ளுர் மற்றும் வெளியூர் வியாபாரிகளுக்கு தமது வியாபாரத்தினை மேற் கொள்ள குறிப்பிட்ட சில தினங்களுக்கு உரிய அனுமதியினை மன்னார் நகரசபை வழங்கவுள்ளது என தெரிவித்தார்.
மன்னார் நகரசபை நிதியின் ஊடாக அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுப்பு: நகரசபை உறுப்பினர் இரட்ணசிங்கம் குமரேஸ் -படங்கள்
Reviewed by Author
on
November 27, 2013
Rating:

No comments:
Post a Comment