அண்மைய செய்திகள்

recent
-

பிரதேச சபை உறுப்பினர்களின் வீடுகள் மீது தாக்குதல்

வட மாகாணத்திலுள்ள பிரதேச சபை உறுப்பினர்களின் வீடுகள் மீது இன்று புதன்கிழமை இனந்தெரியாதோரினால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 

சாவகச்சேரி பிரதேச சபை உறுப்பினர் சிறிஸ்கந்தராஜா ஸ்ரீரஞ்சன் மற்றும் வலி. மேற்கு பிரதேச சபை உறுப்பினர் நாகரஞ்சினி ஐங்கரனின் ஆகியோரின் வீடுகள் மீதே இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இது தொடர்பில் பிரதேச சபை உறுப்பினர்; ஸ்ரீரஞ்சன் கருத்து தெரிவிக்கையில்,

"இன்று அதிகாலை 12.10 மணியளவில் எனது வீடு அமைந்துள்ள வீதியில் இனந்தெரியாத நபர்கள் சிலர் மோட்டார் சைக்கிளில் நடமாடுவதனை அவதானித்திருந்தேன். தொடர்ந்து அதிகாலை 1.50 மணியளவில் ஆறு மோட்டார் சைக்கிள்களில் வந்திருந்த ஆயுததாரிகள் எனது வீட்டிலுள்ள ஜன்னல் கண்ணாடிகளை அடித்து நெருக்கியும் தளபாடங்களை பெற்றோல் ஊற்றியும் எரித்தனர்.

நாங்கள் கூக்குரலிட எம்மை நோக்கி துப்பாக்கியினால் சுட்டுவிட்டு ஆயுததாரிகள் சென்றனர். இருந்தும் எமக்கு எதுவித காயங்களும் ஏற்படவில்லை.இது தொடர்பாக சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து, பொலிஸார் வந்து விசாரணைகளை மேற்கொண்டனர்" என்றார்.

இதேவேளை, இன்று அதிகாலை 1.15 மணியளவில் வலி. மேற்கு பிரதேச சபை உறுப்பினர் நாகரஞ்சினி ஐங்கரன் வீட்டின் மீது இனந்தெரியாதோரினால் கல்லெறித் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டன.

"இதனால் வீட்டின் ஜன்னல்கள் மற்றும் கூரை சீற்கள் உடைந்துள்ளன. இது தொடர்பாக வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக" அவர் தெரிவித்தார்.

பிரதேச சபை உறுப்பினர்களின் வீடுகள் மீது தாக்குதல் Reviewed by Author on November 27, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.