அண்மைய செய்திகள்

recent
-

தலைமன்னார் பியர் பாடசாலைக்கான காணி உறுதியினை அமைச்சர் றிசாத் பதியுதீன் பாடசாலை அதிபர் செல்வ ரஜனிடம் கையளித்தார்.- படங்கள்

அரசாங்கத்தின் ஆயிரம் பாடசாலை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் முதல் வரிசைப் பட்டியலில் உள்வாங்கப்பட்ட தலைமன்னார் பியர் பாடசாலைக்கான காணி உறுதியினை வன்னி மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவரும்,அமைச்சருமான றிசாத் பதியுதீன் பாடசாலை அதிபர் செல்வ ரஜ்ஜனிடம் கையளித்தார்.

நீண்ட காலமாக இப்பாடசாலையின் ஒரு பகுதிக்கான காணி உறுதியின்மை தொடர்பில் தலைமைன்னார் பள்ளிபரிபாலன சபையினர் அமைச்சர் றிசாத் பதியுதீனின் கவனத்திற்கு கொண்டிருந்தனர்.

 ( THALAI MANNAR PIER G.T.M.S) இந்த பாடசாலைக்கான காணி உறுதி வழங்கும் நிகழ்வின் போது அமைச்சர் றிசாத் பதியுதீன் கருத்துரைக்கையில்-

இந்த பாடசாலை மாவட்டத்தி்ன் முக்கியமானதொரு பாசாலையாக இருப்பதுடன்,1000 பாடசாலை திட்டத்துக்குள் உள்ளீர்க்கப்பட்டுள்ளது.இந்த திட்டத்திற்குள் பாடசாலைகளை உள்வாகுமாறு பல்வேறு பிரதேச பாடசலைகளின் அதிபர்கள் நேரடியாக வந்து கோறிக்கைவிடுத்தனர்.அவர்களுக்கு யதார்த்தத்தை விளங்க வைத்து எமது மாவட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட ஒரு சில பாடசாலைகளில் தலைமன்னார் பாடசாலையினை உள்வாங்குவதற்கான அனுமதியினை வழங்கினேன்.

இப்பிரதேசம் வர்த்தக ரீதியில் எதி்ர்காலத்தில் அபிவிருத்தி காணவுள்ளதுடன்,மாணவ சமூகத்தின் கல்வியும் அதே போல் முன்னேற வேண்டும்.தலை நகரை் கொழும்பைிலுளள் பிரபல பாடசாலைகளுடன் போட்டி போடும் அளவுக்கு இப்பாடசாலை வளர்ந்தோங்க வேண்டும்.

தற்போது தலைமன்னாருக்கான புகையிரப் பாதை பணிகள் நிறறைவுறும் நிலையில் உள்ளது.இதனால் இன்னும் இப்பிரதேசத்தின் மக்களின் வாழ்வாதாரம் முன்னேறும்.என்றும் அமைச்சர் றிசாத் பதியுதீன் கூறினார்.

இந்த நிகழ்வில் அமைச்சரின் மன்னார் இணைப்பாளர் எம்.முனவ்வர் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.





தலைமன்னார் பியர் பாடசாலைக்கான காணி உறுதியினை அமைச்சர் றிசாத் பதியுதீன் பாடசாலை அதிபர் செல்வ ரஜனிடம் கையளித்தார்.- படங்கள் Reviewed by Admin on December 29, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.