காட்டு யானைகளின் தொல்லைகளால் கற்குளம் பகுதி மக்கள் அச்சம்
வவுனியா, கற்குளம் பகுதியில் காட்டு யானைகளின் தொல்லைகள் அதிகரித்துக் காணப்படுவதால் தாங்கள் தற்போது அச்சத்துடன் வாழ்ந்து வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
வவுனியா, கற்குளம் பகுதியில் காட்டு யானைகள் கிராமத்துக்குள் புகுந்து மக்களின் அன்றாட வாழ்வுக்கு பெரும் அச்சுறுத்தல்களை ஏற்படுத்தி வருவதுடன் பெருமளவான பயன்தரு மரங்களையும் பயிர்களையும் அழித்து வருகின்றன.
கடந்த காலங்களில் குறித்த பகுதியில் எந்த விதமான காட்டு விலங்குகளோ அல்லது யானைகளின் தொல்லைகளோ இன்றி தாங்கள் வாழ்ந்து வந்ததுடன் பயிர்செய்கையிலும் ஈடுபட்டு வந்ததாக அவர்கள் தெரிவித்தனர்.
குறித்த யானைகள் தென்பகுதியில் வளர்க்கப்பட்டு, பின்னர் இப்பகுதி காடுகளில் கொண்டு வந்து விடப்பட்டிருக்கலாம் என்று அப்பகுதி மக்கள் சந்தேகப்படுகின்றனர்.
அத்துடன், காட்டு யானைகளை கட்டுப்படுத்தி தமது பயிர்களையும் பயன்தரு மரங்களையும் பாதுகாக்க உதவ வேண்டுமென உரிய அதிகாரிகளிடம் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காட்டு யானைகளின் தொல்லைகளால் கற்குளம் பகுதி மக்கள் அச்சம்
Reviewed by Admin
on
December 28, 2013
Rating:
.jpg)
No comments:
Post a Comment