அண்மைய செய்திகள்

recent
-

உண்ணாவிரத போராட்டம்: ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி

உண்ணாவிரத போராட்டம் மேற்கொண்டிருந்த யாழ். பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர் ஒருவர் மயங்கி வீழ்ந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் இன்று சனிக்கிழமை (28) அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குருநகரைச் சேர்ந்த அன்ரனி ஜோன் போல் (19) என்பவரே இவ்வாறு மயங்கி வீழ்ந்துள்ளார்.

யாழ்.பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் யாழ்.பல்கலைக்கழகத்திற்கு முன்பாக இரண்டாவது தடவையாகவும் உண்ணாவிரதப் போராட்டத்தில் நேற்று வெள்ளிக்கிழமை (27) காலை முதல் ஈடுபட்டு வருகின்றனர்.

நிரந்தர நியமனம் கோரி யாழ். பல்கலைக்கழகத்தில் கடமையாற்றும் கல்விசாரா ஊழியர்கள் 17 பேர் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர். 

இவர்கள் நிரந்தர நியமனங்கள் கோரி கடந்த சில மாதங்களுக்கு முன்னர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன்போது, நிரந்தர நியமனங்கள் வழங்கப்படுவதாக யாழ். பல்கலைக்கழக நிர்வாகத்தினால் கூறப்பட்டதன் நிமித்தம் ஊழியர்கள் தங்கள் போராட்டத்தினை கைவிட்டிருந்தனர். 

எனினும் அவர்களுக்கு இதுவரையிலும் நிரந்தர நியமனங்கள் வழங்கப்படவில்லை. 

இதனால் அவர்கள் நேற்று (27) முதல் மீண்டும் உண்ணாவிரதப் போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர். 

இவ்வாறு உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட ஒருவரே இன்று (28) மயங்கி வீழ்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 
உண்ணாவிரத போராட்டம்: ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி Reviewed by Admin on December 28, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.