அண்மைய செய்திகள்

recent
-

ஐந்து ஆண்டுகளின் பின் இலங்கையில் மலேரியா நோயாளி பதிவு

இலங்கையிலிருந்து மலேரியா நோய் ஒழிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் நோயாளி ஒருவர் இனம்காணப்பட்டுள்ளார்.

மலேரியா நோய் ஒழிக்கப்பட்டமைக்கு ஐக்கிய நாடுகள் அமைப்பு உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் பாராட்டு வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறான ஓர் சூழ்நிலையில் நாவலப்பிட்டி பகுதியில் மலேரியா நோயாளி ஒருவர் பதிவாகியுள்ளார்.

நவாலப்பிட்டி அம்பகமுவ பிரதேசத்தில் குறித்த நோயாளி பற்றிய தகவல் பதிவாகியுள்ளது.

தென் ஆபிரிக்காவில் கடமையாற்றிய கடந்த மாதம் 27ம் திகதி நாடு திரும்பிய ஒருவருக்கு மலேரியா தொற்றியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

கடந்த ஐந்து ஆண்டுகளில் இலங்கையில் பதிவான முதலாவது மலேரியா நோயாளி இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

குறித்த நபருக்கு டெங்கு நோய் ஏற்பட்டுள்ளதாக்க் கருதி வைத்தியர்கள் சிகிச்சை அளித்துள்ளனர்.

சிகிச்சை பெற்று வீடு திரும்பி நான்கு நாட்களின் பின்னர் மீண்டும் காய்ச்சல் ஏற்பட்டதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட பரிசோதனைகளின் போது மலேரியா தொற்றியிருந்தமை கண்டறியப்பட்டுள்ளது.

மத்திய மலைப் பிரதேசத்தில் மலேரியா நுளம்புகள் உருவாக்கக் கூடிய சாத்தியம் இல்லாத காரணத்தினால், ஆபத்துக்கள் ஏற்பட வாய்ப்பில்லை என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
ஐந்து ஆண்டுகளின் பின் இலங்கையில் மலேரியா நோயாளி பதிவு Reviewed by Admin on December 27, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.