வவுனியா தவிர்ந்து வட மாகாண தனியார் பேரூந்து சேவைகள் பகிஸ்கரிப்பு
வவுனியா தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கத்தால் முறைக்கேடான சேவைகள் இடம்பெறுவதாக தெரிவித்து வட மாகாண தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கங்கள் பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளது.
வட மாகாணத்தில் வவுனியா தவிர்ந்து ஏனைய மாவட்டங்களில் மேற்கொள்ளப்படும் இப் பகிஸ்கரிப்பு சேவையால் போக்குவரத்து சேவைகள் பாதிப்படைந்துள்ளதுடன் பொதுமக்கள் பயணங்களை தொடர்வதிலும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
வவுனியா தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கத்தால் முறைக்கேடான விதத்தில் சில இடங்களுக்கு சேவைகள் இடம்பெறுவதாகவும் இதனை நிறுத்தவேண்டும் எனவும் தெரிவித்தே வட இலங்கை தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கத்திற்கு உட்பட்ட சங்கங்களின் உரிமையாளர்கள் சேவை பகிஸ்கரிப்பில் இன்று (27.12) காலை முதல் ஈடுபட்டு வருகின்றனர்.
இந் நிலையில் இப் பகிஸ்கரிப்பு தொடர்பில் வவுனியா மாவட்ட தனியார் பெரூந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் எஸ்.ரி.கே. இராஜேஸ்வரனுடன் தொடர்புகொண்டு கேட்டபோது, யுத்த காலத்தில் இடம்பெயர்ந்த மக்கள் மெனிக்பாம் முகாமில் இருந்து மீள்குடியேற்றப்பட்டபோது அப் பகுதி மகக்ளின் நலன்கருத்தி தேசிய போக்குவரத்து ஆணைக்குழு மற்றும் அப்போது வவுனியா மாவட்ட அரசாங்க அதிபராக இருந்த பி.ஸ்.எம். சார்ள்ஸ் ஆகியோரின் வேண்டுகோளின் போரில் 8 தனியார் பேரூந்து உரிமையாளர்கள் தம்மிடம் இருந்த தூர இடத்திற்கான வழித்தட அனுமதிகளை மாற்றி மீள்குடியேற்ப்பட்ட பகுதிகளுக்கு தமது சேவையை வழங்க முன்வந்திருந்தனர்.
தற்போதும் அவர்கள் அந்தந்த வழித்தடங்களில் சேவையில் ஈடுபட்டுள்ளனர். எனினும் வட இலங்கை தனியார் பேரூந்து உரிமையளர்கள் சங்கமானது அந்த வழித்தட அனுமதி முறைக்கேடானது என குற்றம்சாட்டுவதுடன் அதனை நிறுத்துமாறும் கோருகின்றனர். ஆனால் வழித்தடங்களுக்கான அனுமதியை வழங்குவதும் அதனை நிறுத்துவதும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு மற்றும் அரசாங்க அதிபர்களுக்கு உரியதே தவிர தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கங்கள் நிறுத்தமுடியாது.
இவ்விடயம் வட இலங்கை தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கத்தினருக்கு தெரிந்திருந்தும் கூட தவறான பிரசாரங்களை மேற்கொண்டு உரிமையாளர்களை பிழையான முறையில் வழிநடத்தி பகிஸ்கரிப்பில் இன்று ஈடுபடுகின்றனர். எனினும் நாம் மக்களுக்கான சேவையை வழங்குவது என முடிவெடுத்து காலையில் இருந்தே சேவையை வழங்கிவருகின்றோம் என தெரிவித்தார்.
எனினும் தமக்கு பகிஸ்கரிப்பில் ஈடுபடும் பேரூந்து உரிமையளர்களால் சிக்கல்கள் ஏற்படும் என்பதனால் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபரூடாக, கடிதம் மூலம் வட மாகாணத்தில் உள்ள அனைத்து இராணுவ நிலையங்கள் மற்றும் பொலிஸ் நிலையங்கள் மூலம் பாதுகாப்பு வழங்குமாறு கோரியுள்ளோம் எனவும் தெரிவத்தார்.
இதேவேளை இவ் விடயம் தொடர்பாக வட மாகாண போக்குவரத்து அமைச்சர் பா. டெனிஸ்வரன் சம்பந்தப்பட்ட சங்கங்களுடன் கலந்துரையாடலை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வவுனியா தவிர்ந்து வட மாகாண தனியார் பேரூந்து சேவைகள் பகிஸ்கரிப்பு
Reviewed by Admin
on
December 27, 2013
Rating:
No comments:
Post a Comment