பாப்பாண்டவர் அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் இலங்கை விஜயம் செய்ய உள்ளார்
பாப்பாண்டவர் பிரான்ஸிஸ் ஆண்டகை அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார்.
நீர்கொழும்பு பொலவலானவில் அமைக்கப்பட்டுள்ள பல்கலைக்கழகமொன்றை திறந்து வைப்பதற்காக பாப்பாண்டவர் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.
கர்தினல் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையின் அழைப்பினை பாப்பாண்டவர் ஏற்றுக்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எதிர்வரும் பெப்ரவரி மாதம் அல்லது மார்ச் மாதத்தில் பாப்பாண்டவர் இலங்கைக்கு விஜயம் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னாள் பாப்பாண்டவர் 16ம் பெனடிக்கின் ஆலோசனைக்கு அமைய இந்த பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டுள்ளது.
வேதக் கல்விக்காக இந்த விசேட பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டுள்ளது.
பாப்பாண்டவர் அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் இலங்கை விஜயம் செய்ய உள்ளார்
Reviewed by Admin
on
December 25, 2013
Rating:

No comments:
Post a Comment