கனேடிய எம்.பி. ராதிகா இலங்கை விஜயம்
கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் ராதிகா சிட்சபேசன் இன்று திங்கட்கிழமை இலங்கை வந்துள்ளார்.
தற்போது யாழ்ப்பாணத்தில் தங்கியுள்ள இவர், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் மற்றும் வட மாகண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் ஆகியோரை சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார்.
அத்துடன் யாழ்ப்பாணத்தை மையமாக கொண்டு செயற்படும் பல அமைப்புக்களையும் சந்தித்து அவர் பேச்சு நடத்தியுள்ளார்.
இதேவேளை, யாழிலுள்ள சபாபதிப்பிள்ளை அகதி முகாமிற்கும் இவர் விஜயம் மேற்கொண்டுள்ளார்.
இந்த முகாமிற்கு ஏற்கனவே பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் விஜயம் மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
கனேடிய எம்.பி. ராதிகா இலங்கை விஜயம்
Reviewed by Admin
on
December 30, 2013
Rating:
.jpg)
No comments:
Post a Comment