ஆலயத்தின் மீது தாக்குதல்; காளி சிலைக்கும் சேதம்
ஹாலிஎல, உடுவர வலஸ்பெந்த மேற் பிரிவு சிவசுப்ரமணிய ஆலயம் இனந்தெரியாத நபர்களினால் திங்கட்கிழமை சேதமாக்கப்பட்டுள்ளதுடன் ஆலயத்திலுள்ள காளி சிலையும் உடைக்கப்பட்டுள்ளது.
ஆலயத்தின் மீதான தாக்குதலை கண்டித்து உடுவரை தோட்டம் முழுவதும் தொழிலாளர்கள் 1000 ற்கும் மேற்பட்டவர்கள் பணி பகிஷ்கரிப்பு போராட்டத்தில் இன்று ஈடுபட்டதோடு ஆலயத்தில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையவர்களை இனங்கண்டு கைது செய்யுமாறும் கோரிநின்றனர்.
பல வருடங்களாக புனர்நிர்மாணப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் இந்த ஆலயத்தின் கும்பாபிஷேகம் சில தினங்களுக்கு முன்பே இடம்பெற்றுள்ளது.
ஆலயத்தின் மீது இவ்வாறான ஒரு செயல் மேற்கொள்ளப்பட்டுள்ளமை கண்டிக்கத்தக்கதும், வருந்த கூடிய விடயமுமாகும் என பசறை தொகுதியின் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி அமைப்பாளர் வடிவேல் சுரேஷ; தெரிவித்தார்.
இக்கோயில் மீதான தாக்குதல் இனங்களுக்கிடையே முரண்பாடொன்றை ஏற்படுத்த மேற்கொள்ளப்பட்ட சதித்திட்டம் எனவும் அது தொடர்பில் பூரண விசாரணையொன்றை மேற்கொள்ளுமாறும் பொலிஸாருக்கு அவர் வேண்டுகோள் விடுத்தார்.
பதுளை மாவட்டத்தில் ஆலயம் ஒன்றின் மீது தாக்குதல் நடத்தபட்டுள்ளது இதுவே முதல் தடவையாகும் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இச்சம்பவம் தொடர்பில் பதுளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Reviewed by Author
on
December 10, 2013
Rating:
Reviewed by Author
on
December 10, 2013
Rating:

No comments:
Post a Comment