சாதாரண தரப் பரீட்சை இன்று ஆரம்பம்
பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் காலை 8 மணிக்கு முன்னதாக பரீட்சை மண்டபத்திற்கு செல்லுமாறு பரீட்சை ஆணையாளர் நாயகம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இம்முறை பரீட்சையில் 5 இலட்சத்து 78 ஆயிரத்து 140 பரீட்சார்த்திகள் தோற்றுவதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் புஷ்பகுமார தெரிவித்தார்.
இவர்களில் 3 இலட்சத்து 84 ஆயிரத்து 56 பாடசாலை மட்ட பரீட்சார்த்திகளும் ஒரு இலட்சத்து 94 ஆயிரத்து 84 தனிப்பட்ட பரீட்சார்த்திகளும் அடங்குவர்.
இதேவேளை, 510 மாற்றுத் திறனாளிகளுக்கென 5 இடங்களில் விசேட பரீட்சை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதோடு 3 கைதிகளுக்கான மகஸின் சிறையில் விசேட பரீட்சை நிலையம் உருவாக்கப்பட்டுள்ளது.
பரீட்சை நிலையங்களுக்கருகில் விசேட பாதுகாப்பு ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ள தோடு பொலிஸார் ரோந்து கடமைகளில் வைக்கப்பட உள்ளனர். பரீட்சையை முன்னிட்டு 534 இணைப்பு நிலையங்களும் 33 பிரதேச சேகரிப்பு நிலையங்களும் 2 மத்திய சேகரிப்பு நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.
20 ஆம் திகதி வரை பரீட்சை நடைபெற உள்ளதோடு பாடசாலைகளில் கூட்டங்கள் வகுப்புகள் நடத்துவது 20 ஆம் திகதி வரை தடைசெய்யப்பட்டுள்ளன. முறைகேடுகளில் ஈடுபடும் மாணவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென எச்சரிக்கப்பட்டுள்ளது.
சாதாரண தரப் பரீட்சை இன்று ஆரம்பம்
Reviewed by Author
on
December 10, 2013
Rating:
Reviewed by Author
on
December 10, 2013
Rating:
.jpg)

No comments:
Post a Comment