மன்னார் நகர சபையின் அசமந்த போக்கு-பலருக்கு எதிராக சட்ட நடவடிக்கை
மன்னார் நகர சபையின் அசமந்தப்போக்கின் காரணமாக பல இடங்களில் உள்ள கழிவுகள் அகற்றுவதில் ஏற்பட்டுள்ள தாமதத்தின் காரணமாக பலருக்கு எதிராக மன்னார் பொலிஸார் சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
நகர சபையினால் அனுப்பப்படுகின்ற வீதி சுற்றிகரிப்பு பணியாளர்கள் உரிய நேரத்தில் உரிய இடங்களுக்குச் சென்று தமது கடமைகளை செய்வதில்லை எனவும்இஇவர்கள் தமதித்துச் செல்வதாகவும் அதற்கு முன் டெங்கு பரிசோதனையில் ஈடுபடுகின்ற மன்னார் பொலிஸார் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுவதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதே வேளை மன்னார் நகர சபைக்குற்பட்ட பல வீதிகள் கொங்கிரீட் வீதியாக அமைக்கப்பட்டுள்ளமையினால் வீடுகளில் தேங்கி உள்ள மழை நீரை வெளியயேற்ற முடியாத நிலையில் உள்ளதாக வீட்டு உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இது இவ்வாறிருக்க டெங்கு நுளம்பு அதிகரிப்பதற்கு காரணமாக இருந்தவர்கள் என்ற குற்றச்சாட்டில் வர்த்தகர்கள்இவீட்டு உரிமையாளர்கள் என பலருக்கு எதிராக மன்னார் பொலிஸார் மன்னார் நீதிமன்றத்தில் வழக்குத்தாக்கல் செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
மன்னார் நகர சபையின் அசமந்த போக்கு-பலருக்கு எதிராக சட்ட நடவடிக்கை
Reviewed by Author
on
December 04, 2013
Rating:

No comments:
Post a Comment