பெண்களுக்கெதிரான பாலியல் வன்முறைகளுக்கு நீதி கோரும் பிரச்சாரம் மன்னாரில் நடைபெறவுள்ளது: மன்னார் மாவட்ட மாதர் ஒன்றியத்தின் இணைப்பாளர் மகா லட்சுமி
குறித்த நிகழ்வினை முன்னெடுக்கும் முகமாக மன்னார் மாவட்ட பெண்கள் உரிமைக்கான செயற்பாட்டுக்குழு எதிர்ப்புப்பேரணி ஒன்றினை மன்னார் பொது நூலகத்திற்கு முன்பாக ஆரம்பித்து மன்னார் பொது வைத்தியசாலை வரை நடாத்த ஒழுங்குசெய்துள்ளது.

எனவே எமது மாவட்டத்தில் இவ்வாறான சம்பங்கள் எதிர்காலத்தில் நடக்காதவாறுமஇ; இவ்வன் முறைச்சம்பவங்களில் ஈடுபடுவோரை எச்சரிக்கும் வகையிலும்,எம்மால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள எதிர்ப்பு பேரணியில் ஆண்கள், பெண்கள், இளைஞர்கள், யுவதிகள் அனைவரும் திரண்டு குரல் கொடுக்குமாறு அன்புடன் அழைக்கிறோம் என மன்னார் பெண்கள் உரிமைக்கான செயற்பாட்டுக் குழு சார்பாக மன்னார் மாவட்ட மாதர் ஒன்றியத்தின் மாவட்ட இணைப்பாளர் மகா லட்சுமி தெரிவித்தார்
அவர் மேலும் தெரிவிக்கையில்
மக்களின் எதிர்ப்பைத் தெரிவிப்பதற்கு இந்த அருமையான வாய்ப்பை அனைவரும் பயன்படுத்துமாறு எதிர்பார்க்கின்றோம் என தெரிவித்தார்
காலம் 05.12.13 காலை 9.00-11.00 வரை
இடம் மன்னார் பொது நூலகத்திற்கு
முன்பாக
மன்னார் மாவட்ட பெண்கள் உரிமைக்கான செயற்பாட்டுக்குழு
பெண்களுக்கெதிரான பாலியல் வன்முறைகளுக்கு நீதி கோரும் பிரச்சாரம் மன்னாரில் நடைபெறவுள்ளது: மன்னார் மாவட்ட மாதர் ஒன்றியத்தின் இணைப்பாளர் மகா லட்சுமி
Reviewed by Author
on
December 04, 2013
Rating:

No comments:
Post a Comment