அண்மைய செய்திகள்

recent
-

திருமறைக்கலாமன்றத்தின் 48ம் ஆண்டு நிறைவு விழா நிகழ்வு மன்னாரில் -படங்கள்

திருமறைக்கலாமன்றத்தின் 48ம் ஆண்டு நிறைவு தினத்தை முன்னிட்டு மன்னார் திருமறை கலாமன்றம் தனது 48வது ஆண்டு நிறைவை நேற்று கொண்டாடியது.

குறித்த நிகழ்வானது மன்னார் திருமறைக்கலாமன்றத்தின் இணைப்பாளர் மோகன்ராஜ் தலைமையில் நடைபெற்றது.

கடந்த3ம் திகதி திருமறைக்கலாமன்றத்தின் இயக்குனர்  தந்தை மரிய சவிரி அடிகளாரின் பிறந்த தினமாகும் .குறித்த தினத்தினை  திருமறைக்கலாமன்றத்தின் ஸ்தாபக நாளாக ஆண்டு தோறும் நினைவுகூறப்பட்டு வருகின்றது.

1965ம் ஆண்டு குறித்த திருமறைக்கலாமன்ற யாழ் உரும்புராயில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது

குறித்த நிகழ்வை நினைவுகூர்ந்து நேற்று காலை மன்னார் திருமறைக்கலாமன்றத்தின் அலுவலகத்தில் மரிய சவிரி அடிகளாரின் தினம் கொண்டடப்பட்டது

குறித்த நிகழவில் திருமறை கலாமன்றத்தின் முன்னாள் இணைப்பாளரும் இயக்குனரின் பிரதிநிதியுமான திரு.பொஸ்கோ, திருமறைக்கலாமன்றத்தின் மூத்த பிரமுகர்களான ஊடகவியலாளர் மக்கள் காதர், டாக்டர்.லோகநாதன், கீதபொன்கலன், பண்ணைவேலை பயிற்ச்சி ஆசிரியர்கள்,மன்றத்தின் கணக்காளர்,மன்றத்தின் நடன இயக்குனர் மற்றும் மன்றத்தின் பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இதன் போது பிரமுகர்களினால் தீபம் ஏற்றப்பட்டதோடு கேக் வெட்டப்பட்டு திருமறைக்கலாமன்றத்தின் 48வது ஆண்டு நிறைவு தினம் கொண்டாடப்பட்டது.

























திருமறைக்கலாமன்றத்தின் 48ம் ஆண்டு நிறைவு விழா நிகழ்வு மன்னாரில் -படங்கள் Reviewed by Author on December 08, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.