மன்னார் விம்பம் பகுதியில் சிறுவர்களை களிப்பூட்டும் மன்னார் சிறுவர் பூங்கா பற்றிய தகவல்கள்.படங்கள் இணைப்பு
மன்னார் நகரசபைக்குச் சொந்தமான சிறுவர் பூ10ங்கா நவீனமயப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த பல ஆண்டுகளாக குறித்த சிறுவர் பூங்கா கவனிப்பாரற்று காணப்பட்டது.மன்னார் நகர்புற சிறுவர்களின் பிரதான பொழுதுபோக்கு மையமாக குறித்த சிறுவர் பூங்கா திகழ்கின்றது.
குறித்த ;சிறுவர் பூங்காவினை புனரமைத்து தரும்படி மக்களால் கடந்த காலங்களில் பல கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டிருந்தது. இதனை அ;டுத்து குறித்த மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற மன்னார் நகரசபை நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன் அடிப்படையில் மன்னார் நகரசபையின் முயற்சியின் ஊடாக சர்வதேச அபிவிருத்திக்கான ஜக்கிய அமெரிக்க முகவர் அமைப்பின்(யு,எஸ்.எய்ட்) நிதியுதவியுடன் குறித்த சிறுவர் பூங்கா புனரமைக்கபட்டுள்ளது.
இதற்கென 1கோடி ரூபாய்கள் செலவிடப்பட்டுள்ளது. இவ்வருடம் பெப்ரவரி மாதம் வைபவரீதியாக திறந்துவைக்கப்பட்ட குறித்த சிறுவர் பூங்கா புது பொலிவுடன் திகழ்கின்றது.
இது திறந்தவைக்கப்பட்டதை அடுத்து சிறுவர்கள் குறித்த பூங்காவில் மாலைவேளைகளில் விளையாடி பொழுதைக்களிப்பதற்கு ஏதுவாக இது அமைந்துள்ளது.
மன்னார் நகரசபையின் மேற்பார்வையில் உள்ள குறித்த சிறுவர் பூங்காவினை மன்னார் நகரசபை சிறந்த முறையில் பராமரித்து வருவது குறிப்பிடதக்கது.
மன்னார் விம்பம் பகுதியில் சிறுவர்களை களிப்பூட்டும் மன்னார் சிறுவர் பூங்கா பற்றிய தகவல்கள்.படங்கள் இணைப்பு
Reviewed by Author
on
December 08, 2013
Rating:
Reviewed by Author
on
December 08, 2013
Rating:






No comments:
Post a Comment