வட மாகாண முதலமைச்சர் உள்ளிட்ட அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கு மன்னாரில் அமோக வரவேற்பு -படங்கள்
குறித்த வரவேற்பு நிகழ்வினை மன்னார் மாவட்ட அனைத்து கூட்டுறவுச்சங்கங்களின் அனுசரணையுடன் மாவட்ட கூட்டுறவுச் சபையினால் நடத்தப்பட்டது.
குறித்த நிகழ்விவு மன்னார் மாவட்ட கூட்டுறவுச்சபை தலைவர் தலைமையில் நடைபெற்றது..
இதன் ஆரம்ப நிகழ்வு மன்னார் பஸார் பகுதியில் இருந்து அதிதிகள் வரவேற்கப்பட்டு ஊர்வலமாகச் சென்று மன்னார் நகர மண்டபத்தை அடைந்தனர். இதன்போது அதிதிகள் கௌரவிக்கப்பட்டு கலைநிகழ்வுகள் இடம்பெற்றதுடன் அதிதிகள் தமது விசேட உரையினை நிகழ்தியிருந்தனர்.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் சிறப்பு விருந்தினர்களாக மீன்பிடி வர்தகம் கைத்தொழில் போக்குவரத்து மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் சுகாதார மற்றும் சுதேச வைத்திய அமைச்சர் பி.சத்தியலிங்கம் ,கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டு துறை அமைச்சர் ரி.குருகுலராஜா கௌரவ விருந்தினர்களாக வடமாகாணசபை உறுப்பினர்கள் ஏ.பிறிமுஸ் சிராய்வா ஜி.குணசீலன் அயூப் அஸ்மின் வன்னி பாராளமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் ,மத பெரியார்கள் மற்றும் பொது மக்கள் பங்குபற்றினர்.
வட மாகாண முதலமைச்சர் உள்ளிட்ட அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கு மன்னாரில் அமோக வரவேற்பு -படங்கள்
Reviewed by Author
on
December 01, 2013
Rating:
No comments:
Post a Comment