அண்மைய செய்திகள்

recent
-

அரச அதிகாரிகள் மக்களின் நலனை முற்படுத்தி தமது பணிகளை முன்னெடுக்க வேண்டும்.-ஆங்கில புது வருட வாழ்த்து செய்தியில்-றிசாத் பதியுதீன்

அரச அதிகாரிகள் மக்களின் நலனை முற்படுத்தி தமது பணிகளை முன்னெடுக்க வேண்டும்.அதற்காக அரசாங்கம் பல்வேறு திட்டங்களை நடை முறைப்படுத்துவதாக தெரிவித்துள்ள வன்னி மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவரும்,கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சருமான றிசாத் பதியுதீன் வருடத்தின் ஆரம்ப நாளான இன்றைய நாளில் தமது வாழ்த்துக்களையும் தெரிவிப்பதாக கூறியுள்ளார்.

 2014 ஆம் ஆண்டை வரவேற்று அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் இடம் பெறும் நிகழ்வுகள் மூலம் நாட்டுக்கும்,மக்களுக்கும் நன்மையளிப்பனவாக இருக்கும் என்றும் அமைச்சர் றிசாத் பதியுதீன் கூறியுள்ளார்.

 வெளிநாட்டு பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ள அமைச்சர் றிசாத் பதியுதீன் தமது வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவித்துள்ளதாவது –

 எமது நாடு,எமது மக்கள் என்ற உயர்ந்த மனப்பக்குவத்துடன் சகலரும் செயற்படுவதன் மூலம் தமக்ககுள் காணப்படும் குறுகிய மன சிந்தனைகளை நிறைவுக்கு கொண்டுவர முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.

 நாட்டின் சட்டதிட்டம்,சமூகங்களின் கலாசார விழுமியங்கள்,விட்டுக் கொடுப்பு,புரிந்துணர்வு,பரஸபர அன்பு செலுத்துகை என்பனவற்றினை மதிப்பதன் மூலம் எம்மில் பல மாற்றங்களை மேற்கொள்ள முடியும் என்றும் அமைச்சர் றிசாத் பதியுதீன் தமது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்
அரச அதிகாரிகள் மக்களின் நலனை முற்படுத்தி தமது பணிகளை முன்னெடுக்க வேண்டும்.-ஆங்கில புது வருட வாழ்த்து செய்தியில்-றிசாத் பதியுதீன் Reviewed by Admin on January 01, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.