விண்வெளி செல்லவுள்ளார் தமிழ் மாணவி
விண்வெளிக்கு முதல்முறையாக செல்வதற்கு தமிழ் மாணவியொருவர் பிரித்தானிய விண்வெளி ஆராய்ச்சி மையத்தால் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
பிரித்தானியாவில் பல மாணவர்கள் விண்வெளி தொடர்பாக கல்வி கற்று வருகின்றார்கள். செயற்கை கோளை விண்வெளிக்கு ஏவுவது, விண்வெளியில் இருந்து நில அளவை செய்வது, என பல்வேறு துறைகளில் சுமார் 30 ஆயிரத்திற்கு மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகிறார்கள்.
இவர்களில் அதீத திறமை மிக்க 2 மாணவர்களை விண்வெளிக்கு அனுப்ப பிரித்தானிய விண்வெளி ஆராய்ச்சி மையம் முடிவெடுத்துள்ளது.
அதில் மிகத் திறமையாக சித்தியடைந்துள்ளார் பிரித்தானியாவில் வசிக்கும் தமிழ் மாணவி. அவர் பெயர் சிவேன் ஞானகுலேந்திரன் .
இந்த மாணவி நுண்ணியல் உயிர்களைப் பற்றி நன்கு கற்று திறமை பெற்றிருக்கிறார். அத்தோடு அவர் விண்வெளி ஆராய்ச்சியிலும் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
விண்வெளி செல்லவுள்ளார் தமிழ் மாணவி
Reviewed by Admin
on
January 09, 2014
Rating:

1 comment:
She is not going to Space.She was in a group of people who make experiments for astronauts. Her experiment will be going through further researches by astronauts in International Space Station.
Post a Comment