அண்மைய செய்திகள்

  
-

தலைமன்னார் பியரில் சிரமதானமும் உள்ளக வீதி புனரமைப்பும்


தலைமன்னார் பியர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பலநோக்கு பொதுமண்பத்திற்கு செல்வதற்கு இதுவரை மணல்வீதி மட்டுமே அமைக்கப்பட்டிருந்தது. இந்நிலையல் அமைப்பின் மூலம் செம்மண் வீதி அமைக்க தீர்மானிக்கப்பட்டது. அதற்கான பொறுப்பையும் செம்மண்ணிற்கான  செலவையும் நிறுவனமே ஏற்றுக்கொண்டது.

அதற்கமைவாக இன்று 19.01.2014 ஞாயிற்றுக் கிழமை காலை 7.00 மணியளவில்  தலைமன்னார் பியர் கிராம அலுவலர் ஜனாப். அப்துல் ரவுப் மற்றும் சமுர்த்தி உத்தியோகத்தர் திரு. சீ.ஜவாகிர் அவர்கள் தலைமையில் ஊர் பொதுமக்களின் பங்களிப்போடு வீதி போடுவதற்கான இடம் துப்புரவு செய்யப்பட்டது. குப்பை கூலங்கள் அகற்றப்பட்டது.

.  அதனைத் தொடர்ந்து செம்மண் வீதி தலைமன்னார் கடற்கரை வீதியிலிருந்து தலைமன்னார் பியர் உபதபால் நிலையம் வழியாக பலநோக்கு பொதுமண்டபம் வரை போடப்பட்டது. 

ஊர் பொதுமக்கள் அனைவரும்  சிரமதானத்தில் தமது பங்கினை வழங்கினர்.










தலைமன்னார் பியரில் சிரமதானமும் உள்ளக வீதி புனரமைப்பும் Reviewed by NEWMANNAR on January 19, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.