15ம் திகதி பளை வரை ரயில் பரீட்சார்த்த பயணம்
வடக்கு ரயில் பாதை புனரமைப்புப் பணிகளில் இதுவரை எழுதுமட்டுவாள்வரை பூர்த்தியடைந்துள்ள நிலையில், எதிர்வரும் 15ம் திகதி பளைவரை பரீட்சார்த்த பயணம் இடம்பெறவுள்ளதாக ரயில்வே திணைக்களத்தின் அதிகாரியொருவர் தெரிவித்தார்.
இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் முன்னெடுக்கப்படும் வடக்கு ரயில் பாதை புனரமைப்புப் பணிகளில் வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் வரையான ரயில் பாதை புனரமைப்புக்கு 1,500 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி கிடைதுள்ளது.
கடந்த ஆண்டு செப்டெம்பர் மாதம் 14ம் திகதி ஓமந்தையிலிருந்து கிளிநொச்சி வரையான ரயில் சேவையை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஆரம்பித்து வைத்தமை குறிப்பிடத்தக்கது.
இதனைத் தொடர்ந்து மீதி இடங்களுக்கான ரயில் பாதை புனரமைக்கப்பட்டுவந்த நிலையில், தற்போது எழுதுமட்டுவாள்வரை முடிவடைந்துள்ளதாகவும் அவர் கூறினார்.
15ம் திகதி பளை வரை ரயில் பரீட்சார்த்த பயணம்
Reviewed by Admin
on
January 10, 2014
Rating:
No comments:
Post a Comment