அண்மைய செய்திகள்

recent
-

முல்லைத்தீவு விசுவமடு மத்தி பொதுநூலகத் திறப்பு விழா

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு விசுவமடு மத்தி பொதுநூலகம் வாசகர்களினதும் இளைஞர்களினதும் இணைந்த உதவிகளுடன் மீள்புனரமைப்பு செய்யப்பட்டு வியாழக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

 இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்ட முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் இந்நூலகத்தை நாடா வெட்டி திறந்து வைத்தார். சிறப்பு விருந்தினர்களாக பூநகரி பிரதேச செயலாளர் எஸ்.சத்தியசீலன், உள்ளூராட்சி உதவி ஆணையாளர் ந.பிரபாகரன், புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் எ.பிரதாபன், புதுக்குடியிருப்பு பிரதேச சபை செயலாளர் மிதிலைநாதன் ஆகியோர் கலந்துகொண்டனர். 


 விசுவமடு மத்தி பொதுநூலகம் கடந்த காலத்தில் சுமார் 15ஆயிரத்திற்கும் அதிக நூல்களைக் கொண்டு வாசகர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்கின்ற நூலகமாகக் காணப்பட்டது. இந்நிலையில் கடந்த யுத்த காலத்தில் இந்த நூலகம் சேதமடைந்துள்ளதுடன் பத்தாயிரம் வரையான நூல்களும் அழிவடைந்துள்ளன.

 இருப்பினும் எஞ்சிய ஐயாயிரம் வரையான நூல்கள் பூநகரி பிரதேச செயலாளர் எஸ்.சத்தியசீலனால் பாதுகாக்கப்பட்டு நூலக நிர்வாகத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
முல்லைத்தீவு விசுவமடு மத்தி பொதுநூலகத் திறப்பு விழா Reviewed by NEWMANNAR on January 25, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.