கிளிநொச்சியில் நுளம்பு வலை கயிற்றில் சிக்கி சிறுமி பலி
கிளிநொச்சி, வட்டக்கச்சி பகுதியில் நுளம்பு வலைக்கு கட்டுப்பட்டிருந்த கயிறு இறுகிய நிலையில் 12 வயது சிறுமியொருவர் உயிரிழந்துள்ளார். சுரேந்திரன் கீர்த்தனா என்ற சிறுமியே இவ்வாறு உயிரிழந்தவராவார்.
மேற்படி பகுதியிலுள்ள குறித்த சிறுமி நேற்று (23) கட்டிலில் படுத்துக்கொண்டு நுளம்பு வலைக்கு கட்டப்பட்டிருந்த கயிற்றோடு விளையாட்டிக்கொண்டிருந்த வேளையில், கயிறு குறித்த சிறுமியின் கழுத்தில் இறுகியுள்ளது.
இதனை அவதானித்த பெற்றோர் குறித்த சிறுமியை உடனடியாக கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை சிறுமி உயிரிழந்துள்ளார்.
கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற நீதிபதி எம்.ஐ.வாகப்தீன் சடலத்தினை பிரேத பரிசோதனையின் பின்னர் பெற்றோரிடம் ஒப்படைக்குமாறு கிளிநொச்சி பொலிஸாருக்கு உத்தரவிட்டார். இதற்கமைய இன்று (24) மாலை சடலம் பெற்றோரிடம் கையளிக்கப்பட்டது.
கிளிநொச்சியில் நுளம்பு வலை கயிற்றில் சிக்கி சிறுமி பலி
Reviewed by NEWMANNAR
on
January 25, 2014
Rating:
Reviewed by NEWMANNAR
on
January 25, 2014
Rating:


No comments:
Post a Comment