வடமாகாண நீதிபதிகளுக்கான செயலமர்வு
வடமாகாண நீதிபதிகளுக்கான ஒரு நாள் செயலமர்வு யாழ்.நீதிமன்றக் கட்டிடத்தில்  நேற்று காலை 10 மணிக்கு ஆரம்பமானது. 
 இந்தச் செயலமர்விற்கு பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ், அமெரிக்காவிலிருந்து வருகை தந்த நீதிபதி ஆகியோர் வளவாளர்களாகக் கலந்துகொண்டு விளக்கவுரைகளை வழங்கினர்.
 இதில் 'சட்டமும் வழக்கு நடைமுறைகளும்' பற்றி நீதிபதிகளுக்கு விளக்கமளிக்கப்பட்டது.
 இச் செயலமர்வில் யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர், யாழ் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களைச் சேர்ந்த 9 நீதிபதிகள் கலந்துகொண்டனர்.
வடமாகாண நீதிபதிகளுக்கான செயலமர்வு
 
        Reviewed by NEWMANNAR
        on 
        
January 31, 2014
 
        Rating: 
      

No comments:
Post a Comment