அண்மைய செய்திகள்

recent
-

வட­மா­காண திணைக்­க­ளத்தின் அதி­கா­ரிகள் மும்­மொ­ழிக்­கொள்­கையை கடைபிடிப்பதில்லை.

வடமாகாண சபைக்குட்பட்ட திணைக்களங்களில் கடமையாற்றுகின்ற அதிகாரிகளின் வாகனங்களின் பெயர் பலகைகள் சிங்கள மொழியில் மட்டும் காணப்படுவதால் தமக்கு பல்வேறு அசௌகரியங்கள் ஏற்படுவதாக மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர் . 

வடமாகாணசபைக்குட்பட்ட திணைக்கள அதிகாரிகள் தமது வாகனங்களின் பெயர்விபரங்களை தனிச்சிங்களத்தில் காட்சிப்படுத்தியுள்ளதனால் சாதாரண மக்களிலிருந்து ஆங்கில அறிவுடைய படித்தவர்கள் வரை பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொண்டு வருகின்றனர் .

நாட்டில் மும்மொழிக்கொள்கைகள் அமுல்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­பொ­ழு­திலும் வடமாகாண திணைக்களத்தின் அதிகாரிகள் மட்டும் இதனைக் கடைப்பிடிப்பதில்லை எனவும் மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர் .

எனவே அரசின் மும்மொழிக்கொள்கைக்கு அமைவாக வடமாகாண திணைக்கள அதிகாரிகளின் வாகனங்களிலும் மும்மொழிகளில் பெயர்கள் , விபரங்களைக் காட்சிப்படுத்த வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாகவுள்ளது .
வட­மா­காண திணைக்­க­ளத்தின் அதி­கா­ரிகள் மும்­மொ­ழிக்­கொள்­கையை கடைபிடிப்பதில்லை. Reviewed by NEWMANNAR on January 19, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.