புகைத்தலுக்கு எதிரான விழிப்புணர்வு நடை பவனி மன்னாரில் -படங்கள்
புகைத்தல் வாரத்தை ஒட்டி விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலான நடைபவனி ஒன்று இன்று காலை மன்னாரில் நடைபெற்றது.
மன்னார் சுகாதார அதிகாரி பணிமனையின் ஏற்ப்பாட்டில் நடைபெற்ற குறித்த நிகழ்வு மாவட்ட சுகாதார வைத்திய அதிகாரி டாக்கடர். என்.றோய் தலைமையில் நடைபெற்றது.
இன் நிகழ்வின் மன்னார் சுகாதார அதிகாரி பணிமனையிலிருந்து ஆரம்பிக்கப்பட்டு மாவட்ட செயலக வீதியூடாக சென்று மன்னார் பசார் பகுதியுடாக மன்னார் அரச போக்குவரத்து நிலையத்தை வந்தடைந்தது.
பின் அங்கிருந்து புறப்பட்டு மீண்டும் மன்னார் சுகாதார அதிகாரி பணிமனையினை அடைந்தது.
குறித்த விழிப்பணர்வு பவனியின் போது புகைத்தலினால் ஏற்படும் பாதிப்புக்கள் பற்றிய தகவல்களை ஒலிபெருக்கியின் மூலம் ஒலிபரப்பியதுடன் பாதிப்பகள் தொடர்பான சுலோகங்களை தாங்கியவாறு நடை பவனியில் 100க்கும் மேற்பட்ட மக்கள் கலந்த கொண்டனர்.
இன் நிகழ்வில் மாவட்ட சுகாதார மேற்ப்பார்வை உத்தியோகஸ்தர்கள், மாவட்ட பொது சுகாதார பரிசோதகர்கள்,தாதிமார், இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் பிரதிநிதிகள் உள்ளிட்ட தண்னார்வு தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றம் பாடசாலை மாணவ மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்
புகைத்தலுக்கு எதிரான விழிப்புணர்வு நடை பவனி மன்னாரில் -படங்கள்
Reviewed by Author
on
January 17, 2014
Rating:
No comments:
Post a Comment