அண்மைய செய்திகள்

recent
-

பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து 2013ம் ஆண்டிற்கென செலவிடப்பட்ட நிதி அறிக்கை வெளியீடு

 பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனின் 2013ம் ஆண்டிற்கான பண்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து மன்னார் மாவட்டத்தின் அபிவிருத்திகளுக்கென வழங்கப்பட்டுள்ள நிதியின்; திட்ட அறிக்கை
வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி மன்னார் பிரதேச செயலகத்திற்குட்பட்ட அபிவிருத்தி செயற்திட்டத்திற்கு அமைவாக

1) வாகன சாரதி பயிற்ச்சிக்கென  160,000.00 ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது இதன் மூலம் 10 இளைஞர்கள் பயனடைந்துள்ளனர்.

2) கள்ளியகட்டைக்காடு கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட நொச்சிக்குளம் அரசினர் தழிழ் கலவன் பாடசாலை சுற்று மதில் நிர்மான வேலைகளுக்கு 100,000.00 ரூபாவும்

3) மன்னார் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பனங்கட்டு கொட்டு கிழக்கு கிராம சேவகர் பிரிவில் அமைக்கப்பட்டுள்ள சிறுவர் பூங்கா புனரமைப்புக்கென ரூ 100,000.00 ரூபாவும்

4) தலைமன்னார் கிராமம் வடக்கு சனசமூக நிலைய புனரமைப்புக்கு  100,000.00 ரூபாவும்

5) பேசாலை மன்.பத்திமா மகாவித்தியாலய அபிவிருத்திக்கென  ரூ 100,000.00 ரூபாவும்

6) மன்னார் மாவட்ட விளையாட்டு கழகத்திற்கென   ரூபா 155,000.00 மும்

7) மன்னார் எழுத்தூர் கிராம அபிவிருத்தி சபைக்கான தளபாடம் கொள்வனவிற்கு ரூபா100,000.00 மும்

8) ஓலைத்தொடுவாய் கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட சின்னகரிசல் கிராம அபிவிருத்தி நிலைய கட்டிட புணரமைப்புக்கென ரூபா 100,000.00 மும்

9) தோட்டவெளி  வேதசாட்சிகள் ஆலயத்திற்கான 2.4 கே.வி மின்சார பிறப்பாக்pயிற்கு (ஜெனறேற்றர்) கொள்வனவிற்கு  ரூபா 115,000.00 வும்

10) பட்டிதோட்டம் கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட கீரி முருகன் ஆலய புனரமைப்புகளக்கு ரூபா 100,000.00 மும் செலவிடப்பட்டுள்ளது.

நானாட்டான்        
                       
1) நானாட்டான் பிரதேச செலக பிரிவுக்குட்பட்ட முருங்கன் கிராம சேவகர்பிரிவை சேர்ந்த பன்னவெட்டுவான் அரசினர் தழிழ் கலவன் பாடசாலைக்கான கணனிகள் கொள்வனவிற்கு ரூபா 60,000.00 மும்

2) நானாட்டான் பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பரிகாரிகண்டல் அரச கலவன் பாடசாலைக்கு பிரதிஅச்சிடும் இயந்திரத்திற்கென ரூபா 100,000.00மும்

3) நானாட்டான் பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட வங்காலை ஆனாள் வயோதிபர் சங்கத்திற்கென தளபாட கொள்வனவிற்கு ரூபா 50,000.00 மும்

4) நானாட்டான் பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட வஞ்சியன்குளம் கார்மேல் மாதா ஆலயத்திற்கென ஒலிபெருக்கி சாதனங்களுக்கு  ரூபா 50,000.00 மும்

5) நானாட்டான் பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட நறுவிலிக்குளம் வேளாங்கன்னி ஆலயத்திற் கென ரூபா 100,000.00 மும்

6) நானாட்டான் பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பரிகாரிகண்டல் மெதடிஸ் தேவாலயத்திற்கென ரூபா 100,000.00

7) நானாட்டான் பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கற்கடந்தகுளம் றோமன் கத்தோலிக்க பாடசாலைக்கென பாடசாலை சீருடைகளுக்கு ரூபா 30,000.00 மும் செலவிடப்பட்டுள்ளது.

முசலி

1) முசலி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட முத்தரிப்புத்துறை ஆலய வீதிக்கென ரூபா 100,000.00 மும் வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி 2013 ம் ஆண்டுக்கென   மொத்தமாக ரூபா 1,720,000.00 செலவிடப்பட்டுள்ளது என  பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனின் மன்னார் மாவட்ட இணைப்பாளர் யூட் குரூஸ் தெரிவித்தார்.

இது தொடர்பாக குறித்த கட்சியின் மாவட்ட இணைப்பாளரும் மன்னார் நகரநபையின் உறுப்பினராகிய ரெட்ணசிங்கம் குமரேஸ் அவர்களிடம் கேட்ட போது குறித்த நிதி அறிக்கை   சரி என உறுதிப்படுத்தினார்.

பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து 2013ம் ஆண்டிற்கென செலவிடப்பட்ட நிதி அறிக்கை வெளியீடு Reviewed by Author on January 04, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.