அண்மைய செய்திகள்

recent
-

போர் குற்றங்களை முஸ்லிம்கள் நடு நிலையாக இருந்து பார்க்க வேண்டும்: அமைச்சர் ஹக்கீம்

யுத்த காலத்தில் இலங்கை இடம்பெற்ற போர் குற்றங்களை முஸ்லிம்கள் நடு நிலையாக இருந்து பார்க்க வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நீதி அமைச்சருமான ரவுப் ஹக்கீம் தெரிவித்தார். 

போர் குற்றங்கள் தொடர்பில் சர்வதேசம் இலங்கைக்கு கொடுக்கும் அழுத்தத்தினால் நாட்டில் இனங்களுக்கு இடையில் சகிப்புத் தன்மை ஏற்படுவதுக்கு பாரிய தடங்கலாக உள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.கண்டி, மடவளை மதீனா தேசிய பாடசாலையின் அஷ்ரப் ஞாபகார்த்த கேட்போர் கூடத்தில் இன்று இடம்பெற்ற மீலாதுன் நபி விழாவில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மடவளை காதிமுல் உம்மா நலன்புரி சங்கம் ஏற்பாடு செய்த இந்த நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் ஹக்கீம்,

"போர் குற்றங்களுக்கான அமெரிக்காவின் தூதுவர் ரெப் அன்மையில் இலங்கைக்கு வந்தபோது, நீதி அமைச்சர் என்ற வகையில் என்னையும் சந்தித்தார். அவர் என்னுடன் நடத்திய சந்திப்பின் போது தனது நோக்கத்தை நிரைவேற்றுவதில் அவர் உன்னிப்பாக இருந்தார். இருந்தாலும் நான் கூறிய சிலவற்றையும் அவர் ஏற்றுக்கொண்டார்.

போர் குற்றம் தொடர்பில் சிலர் அது நடந்ததாகவும் மற்றும் சிலர் அப்படி ஒன்று நடக்கவில்லை என்றும் இரு முனைகளில் இருந்து கருத்து தெரிவிக்கின்றனர். ஆனாலும் முஸ்லிம்கள் நடு நிலையில் இருந்து இதனை பார்க்க வேண்டும். முஸ்லிமகளுக்கு எதிராக இன்று நாட்டில் நடக்கும் சம்பவங்களின் பின்னால் பாரிய சதித்திட்டம் உள்ளமை நன்றாக தெரிகின்றது. 

ஹலால் சான்றிதல் வழங்குவதை அகில இலங்கை ஜம்மியதுல் உலமா நிறுத்த வேண்டும் என பொதுபலசேனா கூறியது. குறித்த செயற்பாட்டினை அகில இலங்கை ஜம்மியதுல் உலமா இன்று நிறுத்திய பின்னர் அந்த சபையை தடை செய்ய வேண்டும் என்று பொதுபலசேன கூறுகிறது. 

இதன் மூலம் தெரியவருவது என்னவென்றால் இவர்கள் முஸ்லிம்களை தனாகவே சண்டைக்கு இழுப்பதாகும். இஸ்லாம் எங்களுக்கு நடு நிலமையை வகிக்கவே கற்றுத்தந்துள்ளது. அவ்வாறான நாங்கள் இவ்வாறான சதித்திட்ஙகளில் அகப்படக்; கூடாது. 

ஊடகவியலாலர்கள் தமக்கென்று ஒரு ஒழுக்கக் கோவையை தயாரித்துக் கொள்ள முன்வந்துள்ளனர். அதேபோன்று முஸ்லிம்களும் தமக்கென்று ஒரு சுய ஒழுக்ககோவையை தயாரித்து கொள்ளவேண்டும். முஸ்லிமகளை கண்கானிக்க பொதுபலசேனாவுக்கோ அல்லது வேறுறொரு சமூகத்திற்கோ உரிமை இல்லை. 

நாங்களே சுயமாக அதனை செய்ய வேண்டும். இந்த சுய ஒழுக்ககோவை செயற்பட்டை ஏனைய சமூகங்களும் மேற்கொள்ள வேண்டும்" என்றார்
போர் குற்றங்களை முஸ்லிம்கள் நடு நிலையாக இருந்து பார்க்க வேண்டும்: அமைச்சர் ஹக்கீம் Reviewed by Author on January 15, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.