5 எலும்புக்கூடுகள் பொதியிடப்பட்டு பகுப்பாய்விற்கென அனுப்பிவைப்பு
மன்னார் திருக்கேதீஸ்வரப் பகுதியில் கண்டு பிடிக்கப்பட்ட மனித புதைகுழியில் இன்று வெள்ளிக்கிழமை (31.01.2014) 19வது தடவையாக எச்சங்களை தேடும் பணிகள் மன்னார் மாவட்ட நீதிபதி முன்னிலையில் நடைபெற்றது.
இதன்போது ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டுள்ள எலும்புக்கூடுகளில் 5 எலும்புக்கூடுகள் நிலத்திலிருந்து பிரித்து எடுக்கப்பட்டு பகுப்பாய்விற்கென எடுக்கப்பட்டுள்ளது
கடந்த மாதம் 20 திகதி திருக்கேதீஸ்வரம் பகுதியில் மனித எச்சங்கள் உள்ளது கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து குறித்த பகுதியில் மனித எச்சங்களை தேடி கண்டுபிடிக்கும் பணிகள் மன்னார் மாவட்ட நீதிமன்ற நீதிபதி செல்வி ஆனந்தி கனகரெட்ணம் அவர்களின் உத்தரவிற்கமைவாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இன்நிலையில் இன்று வெள்ளிக்கிழமை காலை 8:30 மணிமுதல் 1:30 மணிவரை குறித்த பணிகள் மன்னார் மாவட்ட நீதிமன்ற நீதிபதி செல்வி ஆனந்தி கனகரெட்ணம் முன்நிலையில் அனுராதபுர சட்ட வைத்திய நிபுணர் டி.எல். வைத்தியரெட்ண தலைமையிலான குழுவின் பங்குபற்றுதலுடன் நடைபெற்றது.
இதன்போதே குறித்த 5 எலும்புக்கூடுகள் குறித்த பகுதியிலிருந்து பகுப்பாய்விற்காக பிரிதேடுக்கப்பட்டு பொதி செய்யப்பட்டு பாதுகாப்பாக வைக்க்பட்டுள்ளது.
எனினும் இன்று எலும்புக்கூடுகள் எதுவும் மீட்க்கப்படவில்லை
.
இது வரையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள 54 எலும்புக்கூடுகளில் 28 எலும்புக்கூடுகள் நிலத்திலிருந்து பிரிக்கப்பட்டு பகுப்பாய்விற்கென எடுக்கப்பட்டுள்ளது.
எடுக்கப்பட்டுள்ள குறித்த எலும்புக்கூடுகள் பொதிசெய்யப்பட்டு இலக்கமிடப்பட்டு பாதுகாப்பான முறையில் வைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை எனித எச்சங்களை தேடும் பணி எதிர்வரும் பெப்பரவரி 10ம் திகதி நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது
5 எலும்புக்கூடுகள் பொதியிடப்பட்டு பகுப்பாய்விற்கென அனுப்பிவைப்பு
Reviewed by Author
on
January 31, 2014
Rating:
No comments:
Post a Comment