இலங்கை சுயாதீன, நம்பகரமான விசாரணை மூலம் உண்மையை கண்டறிய வேண்டும் - அமெரிக்கா
இலங்கையின் இறுதிக்கட்ட யுத்தத்தின்போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சுயாதீனமானதும் நம்பகரமானதுமான விசாரணைகளுடாக இதன் உண்மைத் தன்மையைக் கண்டறியுமாறு அமெரிக்கா மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
தேவையேற்படும் சந்தர்ப்பத்தில் சட்டத்தின் குற்றவாளிகளை முன் நிறுத்துமாறும் அமெரிக்க அரசாங்கம் இலங்கை அரசாங்கத்தை ஊக்குவிப்பதாக அமெரிக்க சிறப்புத் தூதுவர் ஸ்டீவன் ஜே. ரப் தெரிவித்துள்ளார்.
கடந்த 6ஆம் திகதி தொடக்கம் கடந்த 11ஆம் திகதி வரை இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டிருந்த ஸ்டீவன் ஜே. ரப் தனது விஜய நிறைவின்போது இதனை தெரிவித்துள்ளார்.
அரசியல் தலைவர்கள் மற்றும் சிவில் சமூகத்தினரை சந்தித்த அசர் முன்னாள் யுத்த வலயங்களுக்கும் நேரடியாக விஜயம் செய்தார்.
மோதல்களின் பின்னர் அடைந்துள்ள முன்னேற்றங்கள், அத்தோடு நல்லிணக்கம் நீதி மற்றும் பொறுப்புக் கூறும் கடப்பாடு விடயங்களில் இலங்கை மக்கள் தொடர்ந்தும் கொண்டுள்ள விருப்பத்தையும் செவிமடுத்தார்.
தூதுவர் ரப், தனது கலந்துரையாடல்களின் போது யுத்தத்தின் இறுதிப்பகுதியில் இடம்பெற்ற சம்பவங்கள் உட்பட பாரதூரமான மனித உரிமை மீறல்கள் மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்ட மீறல்கள் தொடர்பாக நேரில் கண்டசாட்சிகளிடமிருந்து விபரங்களை கேட்டறிந்தார்.
இதன் பின்னணியில் சுயாதீனமானதும் நம்பகரமானதுமான விசாரணைகளுடாக இதன் உண்மைத் தன்மையைக் கண்டறியுமாறும் இலங்கை அரசாங்கத்தின் கோரிக்கை முன்வைத்துள்ளார்.
இலங்கையிலுள்ள அனைத்து மக்களுக்குமான சுபீட்சம் மற்றும் சமாதானத்தை மேம்படுத்துவதற்காக இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றுவதற்கு அமெரிக்கா தொடர்ந்தும் அர்ப்பணிப்புக் கொண்டுள்ளது.
சம்பவங்கள் அவற்றிற்கான ஏற்புடைய தீர்வுகள் தொடர்பாக அனைத்து தரப்பினரும் இணக்கப்பாட்டிற்கு வருவதும் சட்டத்தின் ஆட்சி மற்றும் ஜனநாயக ஆட்சியின் கொள்கைகளை மதித்து ஒன்றிணைந்த நாடாக முன்னோக்கிச் செல்வதும் மிகவும் முக்கியமானதாகும் என ஸ்டீவன் ஜே. ரப் மேலும் தெரிவித்துள்ளார்.

.jpg) Reviewed by Author
        on 
        
January 13, 2014
 
        Rating:
 
        Reviewed by Author
        on 
        
January 13, 2014
 
        Rating: 
      .jpg) Reviewed by Author
        on 
        
January 13, 2014
 
        Rating:
 
        Reviewed by Author
        on 
        
January 13, 2014
 
        Rating: 
.jpg)
 
.jpg) 

No comments:
Post a Comment