அரசியல் கைதியான தந்தை, 18 வயதான மகனுக்கு 18 நிமிடங்கள் அஞ்சலி
தனது மகனான நிதர்ஷனின் இறுதிக்கிரியைகளில் பங்குகொள்ள, கொழும்பு மகஸின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதியான தனது கணவரை அனுமதிக்குமாறு கிளிநொச்சியைச் சேர்ந்த சிவாஜினி வீரலிங்கம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.
இதன் அடிப்படையில், சிறைச்சாலை அதிகாரிகள் அறுவரும் பொலிஸார் 11 பேரும் அவரது கணவனை, இன்று முற்பகல் 11 மணியளவில் அவரது வீட்டு அழைத்துவந்தனர். இதனை முன்னிட்டு அந்த பிரதேசத்தில் பொலிஸ் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டிருந்தது.
தந்தையின் பிரிவு ஏக்கத்தினால் நீண்டகாலமாக தவித்துக்கொண்டிருந்த மகன் கடந்த ஞாயிற்றுக்கிழமை (05) திடீரென தலைசுற்றி விழுந்து மரணமடைந்ததாகவும், இதனால் தமது குடும்பம் மிகவும் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதாகவும் தாயாரான சிவாஜினி ஜனாதிபதிக்கு அவசர கடிதமொன்றை அனுப்பிவைத்திருந்தார்.
விடுதலைப் புலிகளுக்கு உதவினார் என்ற சந்தேகத்தில் 2009 ஆம் ஆண்டு மார்ச் மாதம் கைதான எனது கணவர் கடந்த ஐந்து வருட காலமாக விசாரணைகள் எதுவும் இன்றி கொழும்பு மகஸின் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ளார்.
எங்களுக்கு நிதர்ஷன் (16), நிதுர்சிகா (15), யதுர்வினா (13), கதுர்சிகா (6) ஆகிய நான்கு பிள்ளைகள் இருக்கின்றனர். எங்களுடைய மூத்த மகன் மரணமடைந்துவிட்டார். ஏனைய 3 பிள்ளைகளும் பெண்களாவர். வீரலிங்கம் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்ட பின்னர் எனது குடும்பம் மிகவும் மோசமான நிலையில் இருந்த போது எனது மூத்த மகனே கூலி வேலை செய்து, குடும்பச்சுமையை பொறுப்பேற்றான். இப்போது மூத்த மகனும் மரணமடைந்திருக்கும் நிலையில் நாங்கள் அதிர்ச்சியடைந்திருக்கின்றோம்.
'என்னுடைய 16 வயதான மகனைப் பறிகொடுத்து தவிர்த்துக்கொண்டு நிற்கின்றேன். தயவு செய்து என்னுடைய கணவரை இப்போதாவது விடுதலை செய்யுங்கள். அவர் நீண்ட காலமாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். என்னுடைய மூத்த மகன் தந்தையின் பிரிவு ஏக்கத்தினால் பல வருடகாலமாக தவிர்த்துக்கொண்டு இருந்தவர். மகனின் இறுதிக் கிரியைகளில் பங்குகொள்வதற்காவது எனது கணவரை விடுதலை செய்யுங்கள்' என மனைவி ஜனாதிபதியிடம் கோரியுள்ளதாக அக்கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்நிலையில் இறுதி கிரிகைகளில் பங்கேற்கவும் சுடலைக்கு செல்வதற்கும் அவருக்கு அனுமதியளிக்குமாறு கோரிக்கைவிடுக்கப்பட்டிருந்த போதிலும் அதற்கு அதிகாரிகள் இணக்கம் தெரிவிக்காமல் சுமார் 18 நிமிடங்களில் அவரை அதிகாரிகள் அழைத்து சென்றுவிட்டனர்.
தன்னுடைய மனைவி மற்றும் மகள்மார் உள்ளிட்ட உறவினர்களுடன் அவரை கதைப்பதற்கு அதிகாரிகள் அனுமதி வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
அரசியல் கைதியான தந்தை, 18 வயதான மகனுக்கு 18 நிமிடங்கள் அஞ்சலி
Reviewed by Author
on
January 08, 2014
Rating:
No comments:
Post a Comment