பாடசாலை மாணவர்களால் நடாத்தப்பட்ட விழிப்புணர்வு ஊர்வலம்.(பட இணைப்பு)
மன்/இலகடிப்பிட்டி றோ.க.த.க பாடசாலையின் சுகாதாரக் கழகத்தினரால் புகைத்தல் மற்றும் மது பாவனைக்கு எதிரான விழிப்புணர்வுப் பேரணி பாடசாலை அதிபர் திரு.A.Q.J.பெர்ணான்டோ அவர்களுடைய வழி நடாத்தல் மற்றும் மேற்பார்வையின் கீழ் இன்று (29.01.2014) நடைபெற்றதுடன் சிறந்த சுலோகங்களை காட்சிப்படுத்திய மாணவர்களுக்கு சான்றிதழ்களும் விருந்தினர்களால் வழங்கப்பட்டன.
முன்னதாக பாடசாலை காலைப் பிரார்த்தனையின் போது புகைத்தல் மற்றும் மது பாவனையினால் ஏற்படும் தீங்குகள் தொடர்பில் மாணவர்களுக்கு விழிப்புணர்வுக்
கருத்துக்கள் வழங்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து பாடசாலையிலிருந்து ஆரம்பமாகிய
ஊர்வலம் இலந்தமோட்டை, கட்டைக்காடு, தீவுப்பிட்டி, காத்தான்குளம்,
பாலைக்குழி வழியாக பாடசாலையை வந்தடைந்தது.
இவ்
ஊர்வலத்தில் கலந்துகொண்ட மாணவர்கள் “மது வாழ்வை விடு புது வாழ்வைத் தொடு,
மதுவை ஏன் தொடுகிறாய்? அவதி ஏன் படுகிறாய்?, மதுவை ஒழிப்போம் புதுமை
படைப்போம்” போன்ற கோசங்களை முழங்கியவாறு சென்றனர்.
இவ் விழிப்புணர்வுப் பேணியில்
தொற்றா நோய்க்கான வைத்திய அதிகாரி Dr.எ.சிசில், மாவட்ட மேற்பார்வை பொது
சுகாராரப் பரிசோதகர் திரு.S.இராஜதுரை, பொது சுகாதாரப் பரிசோதகர்
திரு.T.கஜேந்திரன், பொது சுகாதார மாது R.பிரசாந்தி, சுகாதார கல்வி அதிகாரி
திரு.A.ஜெயபாலன், இலகடிப்பிட்டி கிராம சேவையாளர் திரு.S.றொசான் மற்றும்
பாடசாலை ஆசிரியர்கள் ,பெற்றோர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
பாடசாலை மாணவர்களால் நடாத்தப்பட்ட விழிப்புணர்வு ஊர்வலம்.(பட இணைப்பு)
Reviewed by மன்னார் மன்னன்
on
January 29, 2014
Rating:
No comments:
Post a Comment