யாழில் குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 210 பேர் கடந்த வாரத்தில் கைது
யாழ் மாவட்டத்தில் கடந்த ஒரு வார காலத்தில் பல்வேறு குற்றச் செயல்களுடனும் தொடர்புடைய 210 பேரை கைதுசெய்துள்ளதாக யாழ் மாவட்ட விசேட குற்றத் தடுப்பு பொறுப்பதிகாரி பிரதம பொலிஸ் பரிசோதகர் றொகான் பீரிஸ் தெரிவித்தார்.
யாழில் ஊடகவியலாளர்களுடனான வாராந்த சந்திப்பு இன்று பகல் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் நடை பெற்றது.
இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
யாழ்ப்பாணம் பொலிஸ் அத்தியட்சர் பிரிவிற்குட்பட்ட 09 பொலிஸ் நிலையங்களிலும் 126 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதிக சக்தி வாய்ந்த வெடி மருந்து வைத்திருந்த குற்றச்சாட்டின் பெயரில் 2 பேரும் கத்தியால் குத்தி காயப்படுத்திய சம்பவத்துடன் 2 பேரும் குடிபோதையில் வாகனம் செலுத்திய 11 பேரும் அடித்து காயப்படுத்திய சம்பவத்துடன் 36 பேரும் மோசடிகள் சம்பந்தமாக 02 பேரும் சிறுகுற்றங்கள் சம்பந்தமாக 13 பேரும் பிரதான பாதையை மண் கல்லு பறித்து தடை செய்தமை சம்பந்தமாக 2 பேரும்சந்தேகத்தின் பெயரில் 19 பேரும் பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர்கள் 21 பேரும் வாகன விபத்து சம்பந்தமாக 3 பேரும் சட்டவிரோதமாக வீட்டில் பிரவேசித்தது நட்டம் ஏற்படுத்தியது 2 பேரும் திருட்டு 4 பேரும் பொது இடத்தில் அநாகரிகமாக நடந்து கொண்டமை தொடர்பாக 2 பேரும் துணிகள் இன்றி இருந்தமை காரணமாக 2 பேரும் பண மோசடி சம்பந்தமாக ஒருவருமாக மொத்தம் 126 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றங்களில்ஆஜர் படுத்தப்பட்டுள்ளனர்.
காங்கேசன்துறை பொலிஸ் அத்தியட்சகர் பிரிவில் சிறு குற்றங்கள் சம்பந்தமாக 9 பேர், பிடியாணை சம்பந்தமாக 8 பேர், சந்தேகத்தின் பெயரில் 24 பேர், ஏனைய குற்றங்கள் சம்பந்தமாக 43 பேருமாக 84 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றங்களில் ஆஜர் படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
யாழில் குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 210 பேர் கடந்த வாரத்தில் கைது
Reviewed by NEWMANNAR
on
February 21, 2014
Rating:

No comments:
Post a Comment