பேஸ்புக் பொலிஸ் இலங்கையில் அறிமுகம்
முகநூல் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காண விசேட காவல்துறைப் பிரிவொன்று உருவாக்கப்பட்டுள்ளது.
முகநூல் முறைப்பாடுகள் தொடர்பிலான விசாரணைகளை மேற்கொள்வதற்கு என இந்தப் பிரிவு உருவாக்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
குற்றவாளிகளுக்கு எவ்வாறான தண்டனை விதிப்பது என்பது குறித்தும் ஆராயப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறெனினும், இலங்கையில் குற்றச் செயல்கள் இடம்பெற்றால் மட்டுமே சட்ட நடவடிக்கை எடுக்கப்பட முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
போலியாக புகைப்படங்களை வெளியிடுதல், அவதூறு ஏற்படக் கூடிய வகையிலான தகவல்களை வெளியிடுதல், புகைப்படங்கள் மற்றும் தகவல்களை திரிபுபடுத்தி வெளியிடல் உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்கள் இடம்பெற்று வருவதாகத் தெரிவித்துள்ளார்.
முகநூலைப் பயன்படுத்தி குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் பற்றி விசாரணை நடத்தி அவர்களுக்கு எதிராக வழக்குத் தொடரும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
பேஸ்புக் பொலிஸ் இலங்கையில் அறிமுகம்
Reviewed by NEWMANNAR
on
February 21, 2014
Rating:
.jpg)
No comments:
Post a Comment