தமிழ் பாடசாலைக்கு 28 விடுமுறை: 8 ஆம் திகதி பாடசாலை தினம்
சிவராத்திரி தினத்திற்கு மறுநாளான 28 ஆம் திகதி தமிழ் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கி அத்தினத்திற்கு பதிலாக மார்ச் 8 ஆம் திகதியை பாடசாலை தினமாக அறிவிப்பதற்கு கல்வியமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதாக இந்து ஆலய பாதுகாப்பு பேரவை அறிவித்துள்ளது.
தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவின் ஊடாக கல்வியமைச்சர் பந்துல குணவர்தனவிடம் இந்து ஆலய பாதுகாப்பு பேரவை விடுத்த வேண்டுகோளையடுத்தே விடுமுறை வழங்குவதற்கு கல்வியமைச்சு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்த பேரவையின் ஒருங்கிணைப்பு தலைவர் ராஜூ பாஸ்கரன் அறிவித்துள்ளார்.
தமிழ் பாடசாலைக்கு 28 விடுமுறை: 8 ஆம் திகதி பாடசாலை தினம்
Reviewed by NEWMANNAR
on
February 13, 2014
Rating:

No comments:
Post a Comment