அண்மைய செய்திகள்

recent
-

'பேஸ்புக்' குற்றங்கள் அதிகரிப்பு

முகப்புத்தகத்தினூடாக (பேஸ்புக்) மேற்கொள்ளப்படும் குற்றச்செயல்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது என்று பொலிஸார் அறிவித்துள்ளனர். 

இதனால், இணையத்தளம் மற்றும் தொலைத்தொடர்பு சாதன பயன்பாடுகளில் ஈடுபடும் பிள்ளைகள் தொடர்பில் அவர்களின் பெற்றோர்கள் மிகவும் அவதானத்துடன் இருக்குமாறு பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர். 

அத்துடன், முகப்புத்தகக் கணக்கொன்றை நடைமுறையில் வைத்துள்ள பெரியோர்களும் அதனை புத்திசாலித்தனமாகவும் பிரயோசனமிக்கதாகவும் பயன்படுத்த வேண்டும். 

தனிப்பட்ட தகவல்கள் மற்றும் புகைப்படங்களை பதிவேற்றம் செய்வது தொடர்பில் மிகுந்த அவதானம் செலுத்த வேண்டும் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹன தெரிவித்தார். 

அத்துடன், முகப்புத்தகத்தினூடாக பெரியவர்களுக்கிடையே தகாத உறவுகள் ஏற்படுதல், ஏமாற்றுக்காரர்களிடம் அகப்பட்டுக்கொள்ளல் போன்ற நடவடிக்கைகள் அதிகரித்து வருகின்றன. 

கடந்த சில காலங்கள் முதல் இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் பல்வேறு முறைப்பாடுகள் பொலிஸாருக்கு கிடைத்தவண்ணம் இருப்பதாகவும் பொலிஸ் பேச்சாளர் மேலும் கூறினார். 
'பேஸ்புக்' குற்றங்கள் அதிகரிப்பு Reviewed by NEWMANNAR on February 17, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.