முருங்கன் பிரதேச வைத்தியசாலையில் வைத்தியசாலை அபிவிருத்தி சபையினால் மேற்கொள்ளப்பட்டு வரும்அபிவிருத்தி நடவடிக்கைகள்
முருங்கன் பிரதேச வைத்தியசாலையில் 2009ம் ஆண்டு மாவட்ட வைத்திய அதிகாரியாக Dr.Osman Charles தனது கடமையை பொறுப்பேற்று நோயாளிகளுக்கு சிறப்பான மருத்துவ சேவையினை வழங்கி வருகின்றார். அத்தோடு இவ் வைத்தியசாலையை தரம் உயர்த்துவதற்கான நடவடிக்கைகளை வைத்தியசாலை அபிவிருத்தி சபையோடு உத்தியோகத்தர் ஊழியர்களின் ஒத்துழைப்புடன் பல்வேறுபட்ட அபிவிருத்திதிட்டங்களை மேற்கொண்டு வருகின்றார்.
நோயாளர்கள் உத்தியோகத்தர்கள் ,ஊழியர்களுக்கு சுகாதாரமான சிற்றுண்டி உணவினை வழங்குவதற்காக நானாட்டன் பிரதேச கமக்கார அமைப்பக்களின் உதவியுடன் சிற்றுண்டிசாலை கட்டப்பட்டுகொண்டிருக்கின்றது.
நோயாளர்களை பார்வையிட வருபவர்களின் நலன்கருதி வெளிநோயளர் பிரிவில் அவர்களுக்கான தரிப்பிடம் நானாட்டான் பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் உதவியுடன் அமைக்கப்பட்டமை
வைத்தியசாலை வளாகத்தினுள் பிரதேச மக்கள்,ஊழியாகள் மன்னார் மறை மாவட்ட உதவியுடன் புதிதாக இறை இரக்க ஆலயம் அமைக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன.
வைத்தியசாலையின் முற்தோற்ற சுற்றுவட்டத்தினை பிரதேச மக்களின் அன்பளிப்புக்களினுடன் பூமரங்களை பூச்சாடிகளில் நாட்டியதோடு பயன்தரும் மரங்களை நாட்டி வடிவமைத்தமை.
வெளி நோயாளர் பிரிவில் வரும் பாலூட்டும் தாய்மார்களுக்கான தாய்ப்பாலூட்டு;ம் அறை உலக தரிசன நிர்வனத்தின உதவியுடன் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.முருங்கன் பொலிஸ்,இராணுவத்தின் உதவியுடன் 20 வருட காலமாக கன்னிவெடியுடன் காணப்பட்ட வைத்தியசாலைக்கு சொந்தமான காணியினை கன்னிவெடியினை அகற்றி வேலி அமைக்கப்பட்டமை.
தற்போது பாரிய மரங்களை வெட்டி மணல் கொண்டு நிரப்பி சுற்று வேலிகள் அமைத்து சிறுவர்களுக்கான பூங்காவானது உலக தரிசன உதவியுடன் புனரமைக்கப்பட்டுள்ளது.
தற்போது கால் நடைகளின் நடமாற்றத்தை கட்டுப்படுத்துவதற்காகவும் வைத்தியசாலையின் உள்ளக பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காகவும் வைத்தியசாலையை சுற்றி வேலிகள் அமைக்கப்பட்டமை.
குன்றும் குழியுமாக காணப்பட்ட வைத்தியசாலை வளாகத்தினை மணல்,கற்கள் கொண்டு உழவு இயந்திரம், மக்கள் உதவியுடன் நிரப்பி சமநிலைப்படுத்தப்பட்டுள்ளது.
தற்போதுமேற்படி அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ள உதவிகள் புரிந்த பிரதேச மக்கள்,கமக்கார அமைப்புக்கள்,மற்றும் தனியார் நிறுவனங்கள், பொலீஸ்,இராணுவம் ஏனைய நலன் விரும்பிகள் அனைவருக்கும் மாவட்ட வைத்திய அதிகாரி சார்பாகவும் வைத்தியசாலை அபிவிருத்தி சபை சார்பாகவும் எமது நன்றியினை தெரிவத்துக்கொள்கின்றோம்.
மேலும் இது போன்ற தொடர்சியான அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ள உங்களது உதவியினையும் ஒத்துழைப்பையும் வேண்டி நிற்கின்றோம்
நன்றி
வைத்தியசாலை அபிவிருத்திசபை ,
பிரதேசவைத்தியசாலை,
முருங்கன்.
முருங்கன் பிரதேச வைத்தியசாலையில் வைத்தியசாலை அபிவிருத்தி சபையினால் மேற்கொள்ளப்பட்டு வரும்அபிவிருத்தி நடவடிக்கைகள்
Reviewed by NEWMANNAR
on
February 15, 2014
Rating:

No comments:
Post a Comment