நடைமுறையிலுள்ள அடையாள அட்டை செல்லுபடியாகும் – ஆட்பதிவுத் திணைக்களம்
இலத்திரனியல் அடையாள அட்டைகள் விநியோகிக்கப்படும் வரை தற்போது வழங்கப்பட்டுள்ள தேசிய அடையாள அட்டை செல்லுபடியாகும் என ஆட்பதிவுத் திணைக்களம் அறிவித்துள்ளது.
இந்த மாதத்தினுள் இரண்டு மொழியிலான இலத்திரனியல் அடையாள அட்டை, வழங்கப்படும் என ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர், ஆர்.எம்.எஸ்.சரத்குமார தெரிவித்தார்.
புதிய விண்ணப்பதாரிகளுக்கு மாத்திரமே இலத்திரனியல் அடையாள அட்டைகள் விநியோகிக்கப்படவுள்ளதாகவும், தற்போது அடையாள அட்டைகளை வைத்திருப்பவர்கள் புதிய இலத்திரனியல் அடையாள அட்டையை பெற்றுக்கொள்வது அவசியம் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.
நாட்டிலுள்ள மொழிக்கொள்கைக்கு அமைவாக இந்த புதிய இலத்திரனியல் அடையாள அட்டை விநியோகிக்கப்படவுள்ளதாக ஆணையாளர் மேலும் சுட்டிக்காட்டினார்.
நடைமுறையிலுள்ள அடையாள அட்டை செல்லுபடியாகும் – ஆட்பதிவுத் திணைக்களம்
Reviewed by NEWMANNAR
on
February 03, 2014
Rating:

No comments:
Post a Comment