மன்னார் அபிவிருத்தியின் ஒரு அங்கம் மன்னாரின் பிரதான பாலம்
2464 கோடி ரூபாய்கள் செலவில் உருவாக்கப்பட்ட மன்னார் பிரதான பாலம் மக்கள் பயன்பாட்டிற்கு பெரும் உதவியாகவுள்ளது.
மன்னாரின் பிரதான பாலம் மன்னார் மக்களின் இதயமாக கருதப்படுகின்றது. இப் பாலவேலைகள் நிறைவடைந்து மக்களின் பாவனைக்கென வழங்கப்பட்டபின் மன்னார் மக்களின் பல தேவைகளை பூர்த்திரி செய்வதற்கு அரசாங்கம் வழியமைத்து கொடுத்துள்ளது.
இப்பாலமானது கடந்த 2010ம் ஆண்டு மார்ச் மாதம் 18ம் திகதி அதிமேதகு ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவினால் வைபவரீதியாக திறந்து வைக்கப்பட்டது.
இப் பால வேலைகளுக்கென 2464 கோடி ரூபாய்கள் செலவிடப்பட்டுள்ளது.
இப் பாலமும் தாம்போதியும் மன்னார் தீவினை மன்னார் பெருநிலப்பரப்போடும் ஏனைய மாவட்டங்களுடனும் இணைக்கும் ஒரு பிரதான பாதையாக திகழ்வதோடு ஆசியாவின் முக்கியத்துவம் வாய்ந்த பாதையாகவும் திகழ்கிறது.
இதற்கு முன்னர் அமைக்கப்பட்டிருந்த பழைய பாலம் 1930ம் ஆண்டு உருவாக்கப்பட்டதாகும்.இப் பாலத்தின் நீளம் 121.2 மீற்றர்ரும்,அகலம் 4.26 மீற்றராகவும் காணப்பட்டதோடு தாம்போதியின் நீளம் 3.5 கிலோமீற்றரும்,அகலம் 6.3 மீற்றராகவும் கானப்பட்டது.
இப் பழைய பாலத்தினூடாக சுமார் 10 தொன்னிற்கு மேற்பட்ட எடையுடைய வாகனங்கள் செல்ல முடியாத நிலை காணப்பட்டது.
கடந்த காலங்களில் இப் பழைய பாலத்தின் ஊடாக வாகனங்களை செலுத்தும் போது மிக சிரமத்தின் மத்தியிலேயே வகனங்களை செலுத்திவந்தனர். இப் பாலம் ஒரு வழி பாதையாக காணப்பட்டதினால் ஒரு வாகனம் செல்லும் பொழுது மற்றைய வாகனம் இடம்விட்டு தரித்து நின்று பின்னரே செல்லக்கூடியதாக அமைந்திருந்தது.
இந் நிலையினை கருதிதிற்கொண்ட அரசாங்கம் இதனை புணரமைத்து இருவழி பாதையாக அமைத்து கொடுத்துள்ளது. இதன்படி புதிய பாலத்தின் நீளம் 157.1 மீற்றராகவும் அதன் அகலம் 10.4 மீற்றராகவும் காணப்படவதோடு தாம்போதியின் நீளம் 3.5 கிலோமீற்றராகவும்,அதன் அகலம் 11மீற்றராகவும் புணரமைத்து மக்களின் பாவனைக்கென வழங்கப்பட்டுள்ளது.
இப் பாலமும் தாம்போதியும் புணரமைக்கப்பட்டு மக்களின் பாவனைக்கென வழங்கப்பட்டதை அடுத்து இப் பகுதி மக்கள் தமது அன்றாட பயணங்களையும் வியாபார நடவடிக்கைகளையும் எந்த சிரமமுமின்றி சுகந்திராமாக செய்வதற்கு வழி அமைத்து கொடுகடகப்பட்டுள்ளது.
மன்னார் அபிவிருத்தியின் ஒரு அங்கம் மன்னாரின் பிரதான பாலம்
Reviewed by Author
on
February 03, 2014
Rating:
.jpg)
No comments:
Post a Comment