மன்னார் மூர்வீதி பகுதியில் நுளம்புகள் பெருகுவதாக மக்கள் விசனம்-படங்கள்
மன்னார் மூர்வீதியில் அமைந்துள்ள காணியில் செடிகள் வளர்ந்து பற்றை போல் காணப்படுவதால் நுளம்புகள் பெருகுவதாக குறித்த பகுதியில் வசிக்கும் மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
மன்னார் மூர்வீதி பகுதியில் அமைந்துள்ள காணியில் செடி கொடிகள் வளர்ந்து பற்றைகள் போல காட்சியளிக்கிறது.
குறித்த பகுதி மன்னார் பிரதேச செயலகத்திலிருந்து அல் அஸ் கார் பாடசாலைக்கு செல்லும் வீதியில் மன்னார் பிரதேச செயலாளரின் விடுதிக்கும் மன்னார் கமநல கேந்திர நிலையத்திற்கும் குறுக்காக செல்லும் பாதையில் குறித்த பகுதி அமைந்துள்ளது.
குறித்த பகுதியில் பற்றை வளர்ந்து யாரும் கவனிப்பாரற்று காணப்படுகிறது. இதேவேளை குறித்த பகுதியில் கழிவு நீர் தேங்கியுள்ளது.
இந்நிலையில் குறித்த பகுதியில் வசிக்கும் மக்கள் குறித்த பகுதியில் செடிகள் வளர்ந்தும் கழிவு நீர் தேங்கியும் உள்ளதால் இப்பகுதியில் நுளம்புகள் பெருமளவில் பெருகுவதாக தெரிவிப்பதோடு குறித்த விடயம் தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகரிகள் கவனத்தில் எடுத்துக்கொள்ளும்படி தெரிவிக்கின்றனர்.
இந்நிலையினை கருத்திற்கொண்டு குறித்த பகுதியில் ஏற்படக்கூடிய சுகாதார சீர்கேடுகளை உரிய முறையில் நிவர்த்தி செய்வதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வரவேண்டும் என குறித்த பகுதியில் வசிக்கும் மக்கள் வேண்டுகோள்விடுக்கின்றனர்.
மன்னார் மூர்வீதி பகுதியில் நுளம்புகள் பெருகுவதாக மக்கள் விசனம்-படங்கள்
Reviewed by Author
on
February 06, 2014
Rating:

No comments:
Post a Comment